பாகிஸ்தானில் "பயங்கர" தீபாவளி- மசூத் அசாரின் 'வலது கரம்' சுட்டு கொலை- கதறும் தீவிரவாத கும்பல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் வலது கரம் மவுலானா ரஹீம் உல் தாரிக் மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டு வருவதால் பயங்கரவாதிகள் அந்நாட்டு அரசிடம் பாதுகாப்பு கோருவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் பதுங்கிக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளை மதத்தின் பெயரால் பயங்கரவாத இயக்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிப்பது, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது, ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது ஆகியவற்றை அஜெண்டாக்களாக கொண்டு இந்த இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு இந்தியாவும் உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதும் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் தொடர்ந்து இருந்து வருகிறது.

அண்மைகாலமாக பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலின் மூளையாக இருந்த ஹபீஸ் சயீத்தின் மகன் தொடங்கி லஷ்க இ தொய்பா பயங்கரவாதிகள் வரை இந்த மர்ம நபர்களின் டார்கெட்டுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தீபாவளி நாளில் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் வலதுகரமான மவுலானா ரஹீம் உல் தாரிக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான பொதுக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் ரஹீம் உல் தாரிக்கை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்தனர்.
ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சஞ்சுவான் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி க்வாஜா ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித், பதன்கோட் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஷாகீத் லத்தீப், ரியாஸ் அகமது என கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் ரஹீம் உல் தாரிக் மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட சில பயங்கரவாதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் மரண பயத்தில் இருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், அந்நாட்டு அரசிடம் பாதுகாப்பு கோரி உள்ளனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications