Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவருக்கு முன்பு நமீதாவெல்லாம் 'கொசு' மாதிரி... லாஸ்வேகாஸை கலக்கி வரும் "அமேஸான்" அமென்டா.. !

Subscribe to Oneindia Tamil

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வசித்து வரும் அமென்டா என்ற பெண் அதிர வைக்கிறார் அவரது "தொழில்" மூலம். ஆஜானுபாகு உயரத்தில் அதி உயரமாக, பிரமாண்டமாக காட்சி தரும் இந்தப் பெண்ணின் வேலை என்ன தெரியுமா.. தனது வாடிக்கையாளர்களான ஆண்களை செக்ஸ் ரீதியாக அல்லாமல் வேறு பல ரூபங்களில் சந்தோஷப்படுத்துவதுதான்.

இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வது, முதுகில் தூக்கி வைத்துக் கொண்டு சவாரி செய்வது, பச்சைக் குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக் கொண்டு தாலாட்டுவது போல தூக்கிச் செல்வது, இறுக்கி அணைத்து சந்தோஷப்படுத்துவது.. இப்படி சின்னச் சின்ன வேலையை தொழில் போல செய்து வருகிறார் இந்த அமென்டா.

ஆதி காலத்தில் இருந்த பெண் போர் வீராங்கனைகளுக்கு அமேஸான் என்று பெயர் உண்டு. அதி உயரமாக, பிரமாண்டமாக, ஆஜானுபாகுவாக இருப்பார்கள் அவர்கள். அதேபோல அமென்டாவும் இருப்பதால் தனக்கும் அமேஸான் அமென்டா என்று அவரே பெயர் வைத்துக் கொண்டு விட்டார்.

அழுத்திப் பிடிச்சா அவுட்டுங்கோ...!

அழுத்திப் பிடிச்சா அவுட்டுங்கோ...!

அமென்டா படு பிரமாண்டமாக காட்சி தருகிறார். சற்று அழுத்திப் பிடித்தால் போதும் சிக்கும் ஆள் சின்னாபின்னமாகி விடுவது உறுதி. அப்படி ஒரு உறுதியான உடலுடன் பயமுறுத்தலாக இருக்கிறது அமென்டாவின் உருவம்.

இடுப்பு அகலம் 63 இன்ச்..

இடுப்பு அகலம் 63 இன்ச்..

அமென்டாவின் இடுப்புஅகலம் 63 இன்ச்சாம். அதாவது வழக்கமான பெண்களுக்கு இருக்கும் இடுப்பு அளவை விட இரண்டு மடங்கு அதிகம்.

நமீதா போல 6 அடி புயல்!

நமீதா போல 6 அடி புயல்!

நம்ம நமீதாவைப் போலத்தான் இவரும் 6 அடி உயரம்தான். அதாவது 6 அடி 3 இன்ச் உயரத்துடன் இருக்கிறார். ஆனால் நமீதாவை விட பிரமாண்டமாக இருக்கிறார்.

வயதோ 38

வயதோ 38

இவருக்கு வயது 38தான் ஆகிறது. தனது உருவம் குறித்து அவர் கவலைப்பட்டதே இல்லையாம். மாறாக இந்த உடலையே மூலதனமாக வைத்து வித்தியாசமான தொழிலில் குதித்து விட்டார்.

ஆண்கள் வரவேற்கப்படுகிறார்கள்!

ஆண்கள் வரவேற்கப்படுகிறார்கள்!

அதாவது செக்ஸ் அல்லாமல் வேறு விதமாக ஆண்களை குஷிப்படுத்துவதுதான் இவர் செய்து வரும் வேலையாகும். ஆண்களுக்கு மட்டுமே இந்த சேவையைச் செய்து வருகிறாராம் அமென்டா.

தூக்கி விளையாடுவார்

தூக்கி விளையாடுவார்

அதாவது இவரிடம் வாடிக்கையாளராக ஆகும் ஆண்களை இவர் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு செல்வார். முதுகில் ஏற்றி சவாரி செய்வார். முன்பக்கமாக தூக்கி மார்போடு அணைத்து குழந்தை போல தூக்கிச் செல்வார். மடியில் உட்கார வைத்துக் கொள்வார். உடலோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொள்வார். படுக்கையில் இவரைக் கட்டிப்பிடித்தும், இறுக்கமாக அணைத்தும், உடும்புப் பிடி பிடித்தும் விளையாடியும் கொள்ளலாமாம்.

செக்ஸ் மட்டும் நோ

செக்ஸ் மட்டும் நோ

இப்படி எல்லாவற்றையும் அமென்டா செய்வாராம். ஆனால் செக்ஸ் மட்டும் கிடையாது.

கொலை செய்ய மறுத்தார்

கொலை செய்ய மறுத்தார்

ஒருமுறை இவரிடம் வந்த ஒரு மன நலம் குறைந்த வாடிக்கையாளர், தான் மிகவும் அவதிப்படுவதாகவும், தன்னை இறுக்கி அணைத்துக் கொன்று விடும்படியும் கேட்டாராம். ஆனால் அதை மறுத்து விட்டாராம் அமென்டா. மாறாக அவருக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றி அனுப்பி வைத்தாராம்.

மாடல் அழகியாம்

மாடல் அழகியாம்

இவர் மாடல் அழகியும் கூட. நிறைய மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறாராம். இவரது நிஜப் பெயர் அமென்டா சோல்.

டிவி்ட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள்

டிவி்ட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள்

இவரது டிவிட்டர் பக்கத்தில் 6000 பாலோயர்கள் இவருக்கு உள்ளனராம்.

நமீதா கொசு மாதிரி

நமீதா கொசு மாதிரி

நம்ம ஊரில் நமீதா அளவுக்குத்தான் பிரமாண்டப் பெண்களைப் பார்த்துள்ளோம். ஆனால் இவரோ நமீதாவையே இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஓடுவார் போலிருக்கே... !

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+