புத்தகத்தை மூட விட மாட்டேங்குதே இந்த "வெள்ளைப் பணியாரம்"... பெரிய "படிப்ஸ்" ஆ இருக்கானே!
வாஷிங்டன்: நாமெல்லாம் குழந்தையாய் இருந்தப்போ எதற்கெல்லாம் அழுதிருப்போம்? சாக்லெட், மிட்டாய், பள்ளிக் கூடம் போகாமல் இருக்க.... இப்படி நார்மலான விஷயங்களாகத்தான் இருக்கும்.
ஆனால், நெட்டில் வைரலாகப் பரவி வருகின்ற குட்டி பாப்பா ஒன்று எதற்காக அழுகிறது என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்துடன் கூடவே, சிரியோ சிரியென்று சிரித்துத் தீர்த்து விடுவீர்கள்..
"எம்மெட்" என்கின்ற இந்த 10 மாதமே ஆன குட்டிப் பையனுக்கு புத்தகத்தைப் படித்து காட்ட ஆரம்பித்து விட்டால் போதும், கீழே வைக்க விட மாட்டேங்கிறான். புத்தகம் மூடி வைக்கப்பட்டால் போதும் குமுறிக் குமுறி அழுது பொங்கி விடுகிறான்.

அச்சச்சோ முடிஞ்சு போச்சா:
ஒரு சுவாரசியமான புத்தகத்தை மூடிவைக்கும் தருவாயில் நமக்கு எப்படி கஷ்டமாக இருக்குமோ, அது போலவே எம்மெட்டுக்கும் கதைப் புத்தகம் முடிந்துவிட்டால் உடனே கண்ணீர் வந்துவிடுகிறது.

விழுந்து விழுந்து அழுறான்:
புத்தகத்தை அவனது அம்மாவோ அல்லது அப்பாவோ மூடி விட்டால் உடனே கீழே படுத்து தலையை தரையில் வைத்துக் கொண்டு கதறி அழுகிறான். கத்திக் குவிக்கிறான்.

நீ நல்லா வருவ செல்லம்:
வருங்காலத்தில் இந்த ஸ்வீட் பேபி நாசாவின் தலைமை விஞ்ஞானியாக ஆகும், ஏன் அமெரிக்க அதிபரானாலும் கூட ஆச்சர்யமில்லை என்று இந்த வீடியோவைப் பார்த்து கலாய்க்கின்றனர் நெட் வாசிகள்.

பாவம் அம்மா, அப்பா:
ஸ்பைக்கெல்லாம் வைத்துக் கொண்டு நம்ம ஊர் வெள்ளைப் பணியாரம் போல் அழகாய் இருக்கும் இந்தக் குட்டிப் பையனின் சேட்டையால் அவனது அம்மா அலிசியா பாவம் புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டே திரிகிறாராம்.

என்னமா நடிக்கறடா நீ:
அவரது தந்தையோ தூங்கும்போது கூட விரித்து வைக்கப்பட்ட புத்தகத்துடன் தூங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். இல்லையென்றால் மேற்படி நம்ம இளம் புத்தகப் புழு அழுவோ அழுவு என்று அழுகாச்சியை ஆரம்பித்து விடுகின்றாராம்... குப்புறப் படுத்து அழுதெல்லாம் உட்டாலக்கடி வேலை செய்கின்றது இந்த வால் பையன்.
வைரலாகும் வீடியோ:
"உலகின் சோகமான புத்தகப் புழு" என்ற பெயரில் இணையப் பக்கங்களில் வைரலாக சக்கைப் போடு போட்டு வருகின்றது இந்த குட்டிப் பையன் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. அடே எம்மெட்டு அழுவாதடா குட்டிப் பயலே...உனக்கு டசன், டசனா புத்தகம் வாங்கித் தரோம் என்றெல்லாம் இணையதளவாசிகள் சொல்லாத குறைதான் போங்க...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications