அடேங்கப்பா! 5 மனைவிகள், 11 பிள்ளைகள், 40 பேரக்குழந்தைகள்! 90's கிட்ஸை கடுப்பாக்கும் 56 வயது ரோமியோ
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 56 வயது ரோமியோ 5 மனைவிகள், 11 பிள்ளைகள், 40 பேரக்குழந்தைகள் உடன் பிரம்மாண்ட குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என்று கூறுவார்கள். திருமணத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் துணையைப் பொறுத்துத் தான் ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே மாறும்.
அப்படித்தான் தனது வாழ்க்கை மாறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதாலோ என்னவோ பாகிஸ்தானைச் சேர்ந்த 56 வயது ரோமியோ ஒருவர், பல திருமணங்களைச் செய்துள்ளார்.

பாகிஸ்தான்
நம்ம ஊரில் பாவம் அந்த 90ஸ் கிட்ஸ் இன்னுமே கூட பெண் கிடைக்காமல் புலம்பித் தள்ளி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் பாகிஸ்தானை சேர்ந்த இந்த முதியவரைப் பார்த்தால் கண்டிப்பாக ஆத்திரம் பொங்கி வரும். இங்கு ஒரு பெண் கிடைக்கவே 90ஸ் கிட்ஸ் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 11 குழந்தைகளுக்கு அப்பாவான சவுகத் தனது 5ஆவது திருமணத்திற்குக் கடந்த ஆண்டு ரெடியானார்.

5ஆவது திருமணம்
56 வயதான சவுகத் இதற்கு முன்பு 4 திருமணங்களைச் செய்து இருந்தார். அதன் மூலம் அவருக்கு பத்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும், 40 பேரக்குழந்தைகள் மற்றும் 11 மருமகள்கள் உள்ளனர். பாகிஸ்தானின் ரோமியோவாக வலம் வரும் இந்த சவுகத் குடும்பத்தில் மொத்தம் 62 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 5ஆவது திருமணத்திற்கு இவர் ரெடியாகிக் கொண்டு இருந்த போது தான், இவர் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கியது.56 வயதான சவுகத் இதற்கு முன்பு 4 திருமணங்களைச் செய்து இருந்தார். அதன் மூலம் அவருக்கு பத்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும், 40 பேரக்குழந்தைகள் மற்றும் 11 மருமகள்கள் உள்ளனர். பாகிஸ்தானின் ரொமியோவாக வலம் வரும் இந்த சவுகத் குடும்பத்தில் மொத்தம் 62 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு 5ஆவது திருமணத்திற்கு இவர் ரெடியாகிக் கொண்டு இருந்த போது தான், இவர் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கியது.

காரணம் என்ன
இவரது ஐந்தாவது திருமணத்திற்கு முன்பே இவரது 8 மகள்களும் அவரது ஒரே மகனும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து இந்த பாகிஸ்தான் ரோமியோ கூறுகையில், "திருமணமாகாத எனது இரண்டு மகள்களும் தான் என்னை 5ஆவது திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தினர். அப்போது தான் அவர்கள் திருமணம் செய்து கொள்வோம் என அடம்பிடித்தனர். அதன் காரணமாகவே நான் 5ஆவது திருமணம் செய்து கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

மகிழ்ச்சி
கடந்த ஆண்டு இவரது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து அந்த பெண் கூறுகையில், "எனக்கு உண்மையில் சந்தோஷமாகத் தான் உள்ளது. மற்ற பெண்களை போல இல்லாமல், எனக்குத் திருமணத்தின் போதே பெரிய குடும்பம் கிடைத்துள்ளது. அதில் எனக்குச் சந்தோஷம் தான்" என்றார். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் மிகச் சிறப்பாக அவரது திருமணம் நடைபெற்றது.

சவதி
இப்படித்தான் சவுதி அரேபியாவிலும் 63 வயதான அபு அப்துல்லா என்பவர் 53 முறை திருமணம் செய்து கொண்டார். எந்தவொரு சுகத்திற்காகவும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் நிம்மதிக்காகவே திருமணம் செய்து கொண்டதாகக் கூறி இருந்தார். முதல் திருமணத்தின்போது, இத்தனை முறை திருமணம் செய்வேன் என நினைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், முதல் மனைவியுடன் குழந்தைகள் இருந்தன என்றும் இருப்பினும் சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படத் தொடங்கியது என்றும் தெரிவித்தார்.

நிம்மதியைத் தேடி
இதன் காரணமாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரே இடத்தில் இருந்ததால் மனைவிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அடுத்தடுத்து மேலும் இரண்டு பெண்களை மணந்தார்.. இப்படி தான் இவரின் நிம்மதியைத் தேடிய பயணம் தொடங்கியது. அடுத்து வரும் ஆண்டுகளில் பல பெண்களைத் திருமணம் செய்யத் தொடங்கினார் இந்த ரோமியோ!இதன் காரணமாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரே இடத்தில் இருந்ததால் மனைவிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அடுத்தடுத்து மேலும் இரண்டு பெண்களை மணந்தார்.. இப்படி தான் இவரின் நிம்மதியைத் தேடிய பயணம் தொடங்கியது. அடுத்து வரும் ஆண்டுகளில் பல பெண்களைத் திருமணம் செய்யத் தொடங்கினார் இந்த ரொமியோ!
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications