123 வயதிலும் 6 மனைவிகள்.. 10,000 குழந்தைகள் வேறு.. உலகின் வயதான முதலை இதுதான்! ரத்த வரலாறு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

கபோரோன்: பார்த்தாலே நம்மை மிரள வைக்கும் விலங்குகளில் ஒன்று முதலை.. கோரைப் பற்களும் அதன் கரடுமுரடான தோற்றத்தையும் பார்த்தால் அனைவருக்கும் பயமாகவே இருக்கும். இந்த முதலை இனத்தில் மிகவும் வயதான முதலை என்றால் அது ஹென்றி என்ற முதலை தான். 123 வயதாகும் இந்த முதலை இப்போது அமைதியாக இருந்தாலும் இதற்கு ஒரு ரத்த வரலாறே இருக்கிறது. இது குறித்து நாம் பார்ப்போம்.

உலகெங்கும் வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் முக்கியமான விலங்கு முதலை. இதன் கோரைப் பற்களையும் ஆக்ரோஷமான செயல்பாடுகளையும் பார்த்தால் நிச்சயம் அனைவருமே ஒரு நொடி ஸ்டன் ஆகிவிடுவார்கள்.

world offbeat


ஹென்றி:
அப்படி தான் இந்த 700 கிலோ எடையுள்ள 16 அடி நீளமுள்ள முதலை பல ஆயிரம் முதலைகளுக்குத் தந்தையாக உள்ளது. இது உலகின் மிக வயதான முதலை என்ற சாதனையையும் படைத்துள்ளது. மனிதனை உண்ணும் நைல் முதலையான இதன் பெயர் ஹென்றி.. இப்போது உயிரியல் பூங்காவில் வசிக்கும் இந்த முதலைக்கு 123 வயதாகிறது. இந்த முதலைக்கு ஆறு மனைவிகளுடன் 10,000 குழந்தைகளும் இருப்பதாக அந்த உயிரியல் பூங்கா தரப்பு கூறுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் தான் ஹென்றியின் பயணம் தொடங்குகிறது. ஹென்றி 1900ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்துள்ளது. அப்போதே இதன் பயங்கரமான கோரைப்பற்களை வைத்தே அப்பகுதி மக்கள் இதை அடையாளம் கண்டுள்ளனர். உலகின் வயதான முதலை, உயிர் வாழும் மிகப் பெரிய நைல் வகை முதலையாகக் கருதப்படும் இதன் கடந்த காலம் ரத்தத்தால் நிறைந்ததாகவே உள்ளது.

ரத்த வரலாறு:
1900களின் முற்பகுதியில், போட்ஸ்வானாவில் உள்ள உள்ளூர் பழங்குடியினர் ஹென்றியை பார்த்தாலே பயந்து நடுங்குவார்கள். ஏனென்றால் இது அப்பகுதிகளில் உள்ள குழந்தைகளை இரைக்காக வேட்டையாடிக் கொன்று இருக்கிறது.

குழந்தைகளை வேட்டையாடுவதை அந்த முதலை வாடிக்கையாகக் கொண்டு இருந்த நிலையில், அதைக் கொள்ள அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபல சர் ஹென்றி நியூமன் என்ற வேட்டைக்காரனை நாடியுள்ளனர். இருப்பினும், அந்த வேட்டைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இந்த முதலை கொல்வதற்குப் பதிலாகப் பிடித்து அருகே உள்ள உயிரியல் பூங்காவுக்குப் பிடித்துச் சென்றுவிட்டார். இந்த வேட்டைக்காரன் நியூமன் ஹென்றியின் நினைவாகவே அந்த முதலைக்கு ஹென்றி என்று பெயரிடப்பட்டது.

"ஆண்கள் மட்டும் அழிந்து போவார்கள்.." மரபணு ரீதியாக நடக்கும் சின்ன மாற்றம்! உலகம் மொத்தமாக மாற போகுது


எங்கே இருக்கிறது: இதையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக ஹென்றி தென்னாப்பிரிக்காவின் ஸ்காட்பர்க்கில் உள்ள க்ராக்வோர்ல்ட் (Crocworld) பாதுகாப்பு மையத்தில் வசித்து வருகிறது. இத்தனை வயதிலும் இது எக்டிவாக இருக்கிறது என்பதைப் பார்க்கவே மக்கள் பலரும் அந்த உயிரியல் மையத்திற்குச் செல்கிறார்கள். கடந்த காலங்களில் பல நூறு பேரைக் கொன்றுள்ள இந்த ஹென்றி இப்போது உயிரியில் பூங்காவில் அமைதியாக ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறது.

இந்த ஹென்றி ஒரு நைல் முதலை.. சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளில் இந்த வகை முதலை காணப்படுகிறது. ஆக்ரோஷத்திற்குப் பெயர் போன நைல் முதலைகள், ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் காரணமாக இருக்கிறது.

பெரிய முதலை யார்: மிகவும் பழமையான முதலை என்ற சாதனை ஹென்றி வசம் இருந்தாலும் கூட, மிகப் பெரிய முதலை என்ற சாதனை ஆஸ்திரேலியாவில் உள்ள 16 அடி உப்பு நீர் முதலையான காசியஸுடம் தான் இருக்கிறது.. 1984இல் பிடிக்கப்பட்ட காசியஸ், குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள கிரீன் தீவில் உள்ள மரைன்லேண்ட் மெலனேசியா முதலை வாழ்விடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+