Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிக் டாக் டூ ரீல்ஸ்.. மாதம் ரூ.43 லட்சம் சம்பளம்.. பிரபலங்களுக்கு மிகப்பெரிய ஆஃபரை கொடுத்த மெட்டா!

Subscribe to Oneindia Tamil

நியூ யார்க்: இன்ஸ்டாகிராமில் பிரத்யேக வீடியோக்களை பதிவிடுவதற்காக டிக் டாக் பிரபலங்களுக்கு மாதம் ரூ.43 லட்சம் வரை ஊதியம் கொடுக்க மெட்டா நிறுவனம் முன் வந்துள்ளது. டிக் டாக்கில் இருக்கும் பிரபலங்களை இன்ஸ்டாகிராம் பக்கம் அழைத்து வருவதோடு, அவர்களின் ரசிகர்களையும் இன்ஸ்டாகிராம் பக்கம் கொண்டு வரும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ்-க்கு முன்பாக பலரும் டிக்டாக் செயலியை தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் டிக் டாக் செயலியின் சேவை நிறுத்தப்பட்டது. இதன்பின்னரே இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் மக்களிடையே அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

Meta Offering Rs 43 Lakhs to Tik Tok creators for making exclusive content for Instagram reels

இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் டிக்டாக் செயலி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மெட்டாவின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளுக்கு டிக் டாக் கடுமையான போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் மக்களிடையே ஷார்ட் வீடியோ பயன்பாட்டில் இன்ஸ்டாகிராமை முதல் நிலைக்கு கொண்டு செல்ல மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இதற்காக டிக் டாக் பிரபலங்களை மெட்டா நிறுவனம் அணுகியுள்ளதாக தெரியவந்துள்ளது. டிக் டாக் செயலியில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட பிரபலங்கள் முதல் அதற்கு அதிகமான ஃபாலோயர்களை கொண்ட பிரபலங்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. அவர்கள் அடுத்த 3 மாதத்திற்கு இன்ஸ்டாகிராமில் பிரத்யேக ரீல்ஸை பதிவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அதற்காக மாதச் சம்பளமாக ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ.43 லட்சம் வரை கொடுக்க மெட்டா நிறுவனம் முன் வந்துள்ளது. அவர்கள் அனைவரும் அடுத்த 3 மாதத்திற்கு 15 நொடிகள் முதல் 3 நிமிடங்கள் வரையிலான ரீல்ஸ் கண்டெண்டை கொடுக்க வேண்டும். அதேபோல் தங்களின் டிக் டாக் மற்றும் யூட்யூப் செயலிகளிலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பதிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் மிகப்பெரிய பிரபலங்களாக இருப்பவர்களுக்கு 6 மாதத்திற்கு ரூ.2.5 கோடி வரை ஊதியம் கொடுக்கவும் மெட்டா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் 10 வீடியோக்களை ஒரு மாதத்திற்கு வழங்க வேண்டும். வழக்கமாக பதிவிடும் ரீல்ஸை விடவும் 25 சதவிகிதம் அதிகமான ரீல்ஸை பதிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரசிகர்களுடன் உரையாடல், கமெண்ட், கேள்வி உள்ளிட்டவை மூலமாகவும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான டிக் டாக் பிரபலங்கள் ஒப்புக் கொண்டாலும், சிலர் அதிகளவு வீடியோக்களை பதிவிடுவதால், தங்களின் எக்ஸ்க்ளூசிவ் தன்மை போய்விடும் என்று ஆஃப்ரை நிராகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+