ரூ.46,793 கோடி போச்சே.. சீனாவுக்கு, மெக்சிகோ வைத்த பெரிய ஆப்பு.. டிரம்பை சமாதானப்படுத்த அதிரடி

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு வரிகளை போடும்படி ஐரோப்பிய நாடுகள், ஜி 7 நாடுகளிடம் வலியுறுத்தி வருகிறார். மேலும் தனது பிற நட்பு நாடுகளையும் தூண்டுவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியாக மெக்சிகோ சார்பில் சீனாவின் கார்களுக்கு 50 சதவீத வரி போடப்பட்டுள்ளது. இதனால் சீனாவுக்கு ரூ.46,793 கோடி அளவுக்கான கார் வர்த்தகம் பாதிக்கப்பட உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கும், சீனாவையும் டார்க்கெட் செய்து வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இருநாடுகளுக்கும் வரிகளை விதித்துள்ளார். நம் நாட்டுக்கு 50 சதவீத வரி, சீனாவுக்கு 30 சதவீத வரியை தீட்டி உள்ளார். இதனால் அமெரிக்காவை விட்டுவிட்டு நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

mexico china car

இது டிரம்புக்கு பிடிக்கவில்லை. அவர் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள், ஜி 7 நாடுகளுக்கும் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை தூண்டுவதாக கூறி இந்தியா, சீனாவுக்கு வரி போட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இதற்கிடையே தான் சீனா மீது மெக்சிகோ 50 சதவீத வரியை தீட்டி உள்ளது. அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மெக்சிகோ அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மெக்சிகோவுக்கு கார்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது சீனாவில் இருந்து மெக்சிகோவுக்கு கடந்த 2023ம் ஆண்டில் 4.6 பில்லியன் டாலர் அளவுக்கு கார் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அதிகரித்தது. 2024ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ.46,793 கோடி (5.3 பில்லியன் டாலர்) அளவுக்கு கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் மெக்சிகோவில் இருந்து சீனாவிற்கு 262 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே கார் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் சீனாவுடனான வர்த்தகத்தில் மெக்சிகோவிற்கு 5 பில்லியன் டாலர் வரை வர்த்தக பற்றாக்குறை உள்ளது.

அதுமட்டுமின்றி சீனாவின் கார்களுக்கு மெக்சிகோ சிறந்த சந்தையாக உள்ளது. இதனால் அமெரிக்கா கோபமாகி உள்ளது. அதேவேளையில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகம் குறிப்பிடும் படியாக உள்ளது. இதனால் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் வகையில் சீனாவின் கார்கள் மீது மெக்சிகோ 50 சதவீத வரியை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமின்றி சீனா மீதான இந்த வரி விதிப்பால் 8.6 சதவீதம் வரையிலான வெளிநாட்டு இறக்குமதி பாதிக்கப்படும். இதன்மூலம் 3 லட்சத்து 25 ஆயிரம் தொழிற்சாலைகள் மற்றும் அதில் பணியாற்றுவோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மெக்சிகோ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+