கடைக்கு சென்று தன் காயத்திற்கு தானே மருந்து போட்டு கொண்ட கேப்ரான்!
தன் காயத்திற்கு தானே பாண்டேஜ் வாங்கி கொண்டது ஒரு நாய்.
Recommended Video

மெக்சிகோ சிட்டி: நமக்கெல்லாம் உடம்பில் எங்காவது சின்னதா அடிபட்டா அதை கண்டுக்க கூட மாட்டோம். ரத்தம் கொட்டினால்தான், அந்த காயத்திற்கு மருந்து, டாக்டர் என்று செல்வோம்.
ஆனால் மனிதர்களைவிட ஜீவராசிகள் பல விஷயங்களில் உயர்ந்து நிற்கின்றன. இந்த உயிரினங்களிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியது ஏராளமாக மண்டி கிடக்கின்றன. இது ஒரு நாய் பற்றின செய்திதான். ஆனாலும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கிறது.

மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒரு நகர் டெசொயூகா. இங்கு ஒரு தெரு நாய் உள்ளது. அதன் பெயர் கேப்ரான். அந்த நாய் தெரியாமல் எதிலேயோ முட்டி கொண்டதால் காயம் ஏற்பட்டு விட்டது. தன் உடலில் காயம் ஏற்பட்டதை அந்த நாய் உற்று கவனிக்கிறது.
பிறகு அந்த காயத்தை எப்படியாவது சரியாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்து, அடுத்த கணமே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் சென்று பணம் கேட்டுள்ளது. நாயையும், காயத்தையும் கண்ட அந்த நபரும் பணம் எடுத்து நாயிடம் கொடுத்தார்.
அதனை வாங்கி கொண்ட நாய் பின்னர் கடைக்கு சென்று காசு கொடுத்து பாண்டேஜ் வாங்கியது. அதனை தன் காலில் போட்டுக் கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. தொடர்ந்து பாண்டேஜை தன் காலில் போட அந்த நாய் முயன்று கொண்டே இருந்தது. இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.
பொருட்களை வாங்கி வந்து கொடுத்து எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாயைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த கேப்ரான் என்னும் நாய், எதிலும் அலட்சியம் கூடாது என்பதையும், தன்னை முதலில் காத்து கொள்ள முயல வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது. நன்றிக்கு மட்டுமே உரியது நாய் என்று ஒதுக்கி விட்டோம். உற்று கவனித்தால் இன்னும் பல செயல்கள் நாய்களிடம் கவனிக்கத்தக்கதாகவே உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications