அதிகாலையில் அலறிய மக்கள்.. மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 48 மணி நேரத்தில் 2வது பூகம்பம்!
மெக்சிகோ சிட்டி: கடந்த சில காலமாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறது. அப்படித் தான் இன்று மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவின் ஓக்ஸாகா கடற்கரையை ஒட்டி இன்று காலை 6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் பூகம்பத்தால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நிலநடுக்கம் என்பது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மேலும், அது எப்போது எங்கு ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடியாததாலேயே பூகம்பங்கள் பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளன. கடந்த சில நாட்களாகவே ரஷ்யா, துருக்கி என உலகின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இதற்கிடையே இன்று காலை மெக்சிகோவின் ஓக்ஸாகா கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.0ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் அங்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அடுத்தடுத்து தாக்கும் நிலநடுக்கம்
இதே பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இப்போது வெறும் 48 மணி நேரத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை அன்று குவாத்தமாலாவின் தென்மேற்குக் கடற்கரையில், சாம்ப்பெரிக்கோவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தென்-தென்மேற்கில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 9 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது. குவாத்தமாலா நகரம் மற்றும் தெற்கு மெக்சிகோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதேநாளில், மெக்சிகோவின் சியாபாஸ் கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இப்படி அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேநேரம் இந்தப் பூகம்பங்களால் எந்தவித உயிரிழப்புகளோ அல்லது முக்கிய உள்கட்டமைப்புகளுக்குச் சேதங்களோ ஏற்படவில்லை என்று மெக்சிகோ மற்றும் குவாத்தமாலா அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தால் தங்கள் கட்டிடங்கள் எப்படிக் குலுங்கின என்ற வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ஏன் ஏற்படுகிறது
நமது பூமிக்கு அடியில் பல டெக்டோனிக் தகடுகள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று மோதும்போதே நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி மெக்சிகோ மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகள் வட அமெரிக்க, கோகோஸ் மற்றும் கரீபியன் டெக்டோனிக் தட்டுகளின் நில அதிர்வு-செயல்பாட்டு விளிம்பில் அமைந்துள்ளன. இதனால் அவை தொடர்ந்து நிலநடுக்க அபாயத்தை எதிர்கொள்கின்றன. குறுகிய காலத்தில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படும் நிலையில், அங்கு ஒரு வலிமையான நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதையே உணர்த்துவதாக இருக்கிறது.
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
ஆகஸ்ட் 11, 2025 - 6.0 ரிக்டர், ஓக்ஸாகா, மெக்சிகோ (ஆழம்: 10 கி.மீ)
ஆகஸ்ட் 9, 2025 - 5.9 ரிக்டர், குவாத்தமாலா (ஆழம்: 9 கி.மீ)
ஆகஸ்ட் 9, 2025 - 5.7 ரிக்டர், சியாபாஸ், மெக்சிகோ (ஆழம்: 10 கி.மீ)
இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படும் நிலையில், கடற்கரை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏனென்றால் பிரதான நிலநடுக்கம் முடிந்தாலும் கூட அதன் பிறகு பல மணி நேரம் சிறு நில அதிர்வுகள் ஏற்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications