பாறை என்று விடப்பட்டது மாயமான மலேசிய விமானத்தின் பாகமா?
நியூயார்க்: இந்திய பெருங்கடலில் நடத்தப்பட்ட தேடல் பணியின்போது பாறை என்று நினைத்துவிடப்பட்டது மாயமான மலேசிய விமானமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 238 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் விமானத்தை தேடும் பணி ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அண்மையில் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் வால் பகுதி மாயமான மலேசிய விமானத்தினுடையது தான் என்று கூறப்பட்டது.
இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் சோனார் கருவி மூலம் தேடப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை சோனார் கருவி எடுத்த புகைப்படங்களை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்சன் அன்ட் அசோசியேட்ஸ் என்ற புவியியர்பியல் கன்சல்டிங் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

ஆய்வில் சோனார் புகைப்படத்தில் தெரியும் உருவம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது. முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானம் 447ன் பாகங்கள் கடலுக்கு அடியில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் போன்றே தற்போது ஆஸ்திரேலியா தலைமையிலான குழு எடுத்துள்ள சோனார் புகைப்படங்கள் உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தில் விமானத்தை தேடும் பணி மீண்டும் நடக்க உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications