மாயமான விமானம் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்... மலேசிய பிரதமர் உறுதி
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தைக் குறித்த அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும் என மலேசியா அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 5 இந்தியர்கள் உட்பட 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது.
தொடர்ந்து மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் தேடப்பட்டு வருகிறது. ஆனால் விமானம் குறித்து முரண்பட்ட தகவல்கள் தான் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு விமானத்தில் பயணம் செய்த சீனப் பயணிகளின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விபத்திற்கான ஆதாரத்தைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் 8 நாடுளின் 10 கப்பல்கள், 8 விமானங்கள், 49 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டதாகக் கூறி இறப்புச் சான்றிதழ் அளிக்க இருப்பதாக மலேசியா அறிவித்தது. இதற்கும் மலேசியாவை பயணிகளின் உறவினர்கள் கண்டித்தனர்.
இந்நிலையில், நேற்று மலேசிய பிரதமர் நிஜாப் ராசாக், ‘விமானம் காணாமல் போனதற்கான காரணம் மற்றும் அதை தேடும் பணி நிலவரம் குறித்து அடுத்தவாரம் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசிய அரசு மற்றும் சர்வதேச விசாரணைக்குழு நிபுணர்கள் தயாரித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.சர்வதேச விசாரணைக்குழு தாங்கள் சேகரித்த தகவல்களை அடுத்தவாரம் பொதுமக்களுக்கு வெளியிடுவார்கள் என்றார் நிஜாப்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications