நினைத்ததை விட ஜாக்சன் அதிக கருமம் பிடிச்சவராக இருந்திருப்பார் போலயே....!
லாஸ் ஏஞ்செலஸ்: மறைந்த மைக்கேல் ஜாக்சன், தனது செக்ஸ் இச்சைகளால் பாதிக்கப்பட்ட சிறார்கள் 20 பேருக்கு கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் அளவுக்கு ரகசியமாக பணம் கொடுத்து சரிக்கட்டியதாக, ஜாக்சனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள இருவரின் வக்கீல்கள் கூறியுள்ளனர்.
தாங்கள் இளம் சிறார்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் தங்களை பாலியல் ரீதியாக சீரழித்து விட்டதாக கூறி, அவரது எஸ்டேட் வீட்டை தங்களுக்கு இழப்பீடாக தர வேண்டும் என்று கோரி வேட் ராப்சன் மற்றும் ஜேம்ஸ் சேப்சக் ஆகியோர் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போதுதான் இவர்களது வக்கீல் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இந்த வழக்கி் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளார் நீதிபதி.
இந்த இருவரும் கோரும் ஜாக்சனின் எஸ்டேட் வீட்டின் மதிப்பு 1.5 பில்லியன் டாலராகும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் வேட் ராப்சன். இவர் தற்போது நடனக் கலைஞராக இருக்கிறார். தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பலமுறை ஜாக்சன் தவறாக பயன்படுத்தியதாக கூறுகிறார் ராப்சன்.
தற்போது ராப்சனுக்கு 32 வயதாகிறது. சேப்சக்குக்கு 36 வயதாகிறது.
1987ம் ஆண்டு தான் 8 வயது சிறுவனாக இருந்தபோது ஜாக்சன் தன்னை தவறாகப் பயன்படுத்தியதாக சேப்சக் கூறியுள்ளார். அடுத்த ஆண்டில் இன்னொரு முறை தன்னை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை ஜாக்சன் ரகசியமாக திருமணம் வேறு செய்ததாகவும் இவர் கூறுகிறார்.
மேலும் துப்புறவுத் தொழிலாளியான தனது தந்தைக்கு ஜாக்சன் 1 மில்லியன் டாலர் பணத்துக்கு செக் எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார் சேப்சக்.
சேப்சக்கை ஜாக்சன் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக அவரது வக்கீல் திடுக்கிடும் தகவலை கூறுகிறார்.
மறுபக்கம், ராப்சன் 5 வயதாக இருந்தபோது பிரிஸ்பேனில் வைத்து ஜாக்சனுக்கு அறிமுகமாகியுள்ளார். நடனத்தில் ஆர்வம் மிக்கவரான ராப்சன், ஜாக்சனின் தீவிர ரசிகர் ஆவார். இதனால்தான் அவர் ஜாக்சனிடம் நெருங்கிப் பழகியுள்ளார்.
ராப்ஜனுக்கு ஆதரவாக ஜாக்சனிடம் முன்பு பணிப்பெண்ணாக இருந்த பிளாங்கா பிரான்சியா வாக்குமூலம் அளிக்கவுள்ளார். பலமுறை படுக்கை அறையி்ல் ராப்சனுடன், ஜாக்சன் நிர்வாணமாக இருந்ததாக இவர் கூறுகிறார். மேலும் பாத்ரூமில் ராப்சனுக்கு ஜாக்சன் குளிப்பாட்டி விட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications