Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டன் டூ சென்னை வந்த விமானத்தில் கோளாறு! எரிபொருளை நடுவானில் வெளியேற்றி அவசர தரையிறக்கம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டனில் இருந்து சென்னைக்கு இன்று புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஷ் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் லண்டனுக்கே திரும்பியது. இதையடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் Flap adjustment failure ஏற்பட்டதால், உடனடியாக எரிபொருள் வெளியேற்றப்பட்டு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானமும் போயிங் 787 ரக விமானம் ஆகும்.

சென்னை - லண்டன் இடையே பிரிட்டிஷ் ஏர்வேஷ் விமான நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இந்த நிறுவனம் சென்னைக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் லண்டனுக்கு செல்லும் பயணிகள் மட்டும் இன்றி நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் அடிக்கடி பயணம் செய்வதை பார்க்க முடியும்.

mid-air-emergency-on-london-chennai-flight-360-passengers-safe-after-emergency-landing-in-london

360 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

லண்டனில் இருந்து புறப்பட்டு இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும். அதேபோல, சென்னையில் இருந்து அதிகாலை 5.35 க்கு புறப்பட்டு லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த விமானம் நேற்று லண்டனில் இருந்து வழக்கம் போல 360 பயணிகளுடன் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.

எரிபொருள் வெளியேற்றப்பட்டு தரையிறக்கம்

விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, உடனடியாக விமானம் லண்டனுக்கே திருப்பி விடப்பட்டது. இதையடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் Flap adjustment failure ஏற்பட்டதால், உடனடியாக எரிபொருள் வெளியேற்றப்பட்டு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் போயிங் 787 ரக விமானம் ஆகும். அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானமும் இதே ரக விமானம் என்பது கவனிக்கத்தக்கது. சென்னைக்கு வந்த விமானம் அவசரமாக திருப்பிவிடப்பட்டதால், சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து லண்டன் வர இருந்த விமானமும், சென்னையில் இருந்து அதிகாலை புறப்படும் விமானமும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்புக்காகவே

இதனால், லண்டன் செல்ல வந்திருந்த பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். இது பற்றி விமான நிலையை அதிகாரிகள் கூறியதாவது:- அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு விமானங்கள் அனைத்தும் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு மூன்று முறை முழுமையாக பரிசோதிக்கப்படுகிறது. விமானங்களில் சிறிய கோளாறு இருப்பது தெரியவந்தால் கூட முழுமையாக சரி செய்த பிறகே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், விமானங்கள் தாமதம் ஆவதும் ரத்து ஆவதும் அதிகரித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றனர்.

இன்று ஒரே நாளில் இரண்டு விமானங்கள்

முன்னதாக கடந்த 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர அனைவரும் உயிரிழந்தனர். விமானம் மருத்துவ விடுதியில் விழுந்து நொறுங்கியதில் தரையில் இருந்தவர்களும் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

முன்னதாக இன்று ஹாங்காங்கில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும் பாதியில் திரும்பியது. நடுவானில் வந்து கொண்டிருந்தபோது எந்திர கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி ஹாங்காங் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து மீண்டும் அந்த விமானம் ஹாங்காங் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறங்கியது. அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 விமானங்கள் நடுவானில் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+