இஸ்ரேல் மீது குண்டு மழை.. வேலையை காட்டிய "ஹிஸ்புல்லா + ஈரான்.." பெரிதாக வெடிக்கும் போர்? பதற்றம்
டெல் அவிவ்: மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே நேற்றிரவு இஸ்ரேல் மீது திடீரென ஹிஸ்புல்லா படை சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மிகப் பெரியளவில் மோதல் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்தாண்டு அக். 7ம் தேதி தாக்குதலை நடத்தி இருந்தது. அன்றைய தினம் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது. அந்த போரில் காசாவில் உள்ள பல ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் முயலும் போதிலும், போர் தொடர்ந்தே வருகிறது.
சரமாரி தாக்குதல்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பான ஹிஸ்புல்லா கடுமையாக எதிர்த்தது. மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் நேற்றிரவு இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது ஹிஸ்புல்லா சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை இஸ்ரேல் மக்கள் கடைப்பிடித்த நிலையில், அப்போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே அறிய இஸ்ரேல் சில பாதுகாப்பு அமைப்புகளை வைத்துள்ளது. அந்த சைரன் சத்தம் கேட்ட நிலையில், இஸ்ரேல் மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
திடீர் ட்விஸ்ட்.. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் தான் இருக்கிறாராம்.. அதிரும் இஸ்ரேல்.. என்ன நடந்தது
பதற்றம்: அதேநேரம் ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை நடத்தியது உண்மை தான் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகையில், "மத்திய கிழக்கில் பல முனைப் போரை ஏற்படுத்த வேண்டும் என ஹிஸ்புல்லா நினைக்கிறது. நேற்றைய தினம் ஒரு மணி நேரத்திற்குள், மத்திய இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதலை நடத்தினர்" என்று தெரிவித்தார். மொத்தம் 190 ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்து இருக்கலாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க ஈரானின் இஸ்பஹான் அருகே திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இது அங்குப் பதற்றத்தை அதிகரித்த நிலையில், உடனடியாக ஈரான் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. தங்கள் நாட்டில் எந்தவொரு தாக்குதலும் நடக்கவில்லை என்று ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
மத்திய கிழக்கில் கடந்தாண்டு ஏற்பட்ட பதற்றம் இன்னும் குறையவே இல்லை. சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது எனச் சொல்லலாம்.. ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறியளவில் தாக்குதல் நடத்தினாலும், பெரியளவில் இதில் உள்ளே வரவில்லை.
ஈரானும் நேரடியாக இதில் உள்ளே வந்து இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்தால் அது நிச்சயம் 3ம் உலகப் போருக்கே வழிவகுக்கும். இதே உணர்ந்தே உலக நாடுகளின் தலைவர்கள் இரு தரப்பிற்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
