குவைத்தில் நடந்த 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!
குவைத்: குவைத்தில் கே-டிக் நடத்திய 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த 14ம் தேதி துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 10ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் கடந்த 14ம் தேதி துவங்கியது.

குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிகழ்ச்சி துவங்கியது. வெள்ளிக்கிழமை (15.05.2015) அன்று நண்பகல் அதே பள்ளிவாசலிலும், அன்று மாலை ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை (16.05.2015) அன்று ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி, மேலப்பாளையம், உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வரும், மஜ்லிஸுல் உலமா சபை தலைவருமான மவ்லவீ எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மூன்று நாட்கள் இரண்டு இடங்களில் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 1,800 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு உணவும், தேநீரும் வழங்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications