For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுகெலும்பு முறிந்ததுதான் மிச்சம்.. பூமி வட்டம் இல்லை என நிரூபிக்க ராக்கெட்டில் பறந்த முதியவர்!

பூமி வட்டம் கிடையாது தட்டையாக இருக்கிறது என நிரூபிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த முதியவர் ஒருவர் ராக்கெட்டில் பறந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கலிபோர்னியா: பூமி வட்டம் கிடையாது தட்டையாக இருக்கிறது என நிரூபிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த 'மைக் ஹுக்ஸ்' என்ற முதியவர் ஒருவர் ராக்கெட்டில் பறந்து இருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ஏற்கனவே இவர் இப்படி ராக்கெட்டில் பறந்தார் என்பது குறிப்பித்தக்கது. சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதில் பறந்து இவர் சாதனை செய்து வருகிறார்.

'மைக் ஹுக்ஸ்' இதன் மூலம் கின்னஸ் சாதனை பட்டம் கூட வாங்கி இருக்கிறார். தற்போது இவர் முதுகெலும்பு உடைந்து மோசமான உடல்நிலையில் உள்ளார்.

மைக் ஹுக்ஸ் யார்

மைக் ஹுக்ஸ் யார்

பூமி வட்டம் இல்லை தட்டைதான் என நிரூபிப்பதற்காக அமெரிக்காவில் பல இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த இயக்கங்களுக்கு முன்னாடிதான் மைக் ஹுக்ஸ். 62 வயதான இவர் பூமியை தட்டை என்று நிரூபிப்பதற்காக நிறைய முயற்சிகளை செய்து இருக்கிறார்.

எப்படி நிரூபிப்பார்

எப்படி நிரூபிப்பார்

இவர் இதற்காக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறார். வானத்தில், பூமிக்கும் வெளியே பறப்பது இவருடைய திட்டம். பூமிக்கு வெளியே சென்றுவிட்டு, பூமி தட்டையாக இருக்கிறது என்பதை பார்த்து கண்டுபிடிப்பார். இதற்காக 20 வருடமாக கடினமாக உழைத்து வருகிறார்.

பறந்தார்

பறந்தார்

இவர் ஏற்கனவே நீராவியில் இயங்கும் சொந்த ராக்கெட் ஒன்றை உருவாக்கினார். ராக்கெட்டை 'மோஜாவே' என்ற பாலைவன பகுதிக்கு எடுத்துச் சென்று விண்ணில் ஏவினார். அந்த ராக்கெட்டில் தன்னை இறுக்கமாக கட்டி 550 அடி தூரம் பறந்து உள்ளார். ஆனால் அப்போது அவரால் பூமியை சரியாக பார்க்க முடியவில்லை.

எலும்பு உடைந்தது

எலும்பு உடைந்தது

இந்த நிலையில் தற்போது இன்னொரு ராக்கெட் உருவாக்கி பறந்தார். 1,875 அடி வெற்றி கரமாக பறந்து சாதனை படைத்துள்ளார். ஆனால் கீழே இறங்கும் போது, ராக்கெட் மோசமாக தரையிறங்கி இருக்கிறது. இதில் இவர் முதுகெலும்பு உடைந்துள்ளது. தற்போது இவர் மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
In order to prove that a conspiracy of NASA fabricated the shape of the Earth, a man named Mike Hughes from California has launched himself 1,800 feet high in a rocket he built from scrap metal. Mike Hughes has broken his backbone after went on rocket to prove the earth is flat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X