9 மாடல்களை கடத்தி பலாத்காரம்: 7 குழந்தைகளுக்கு தந்தையான லண்டன் கோடீஸ்வரர் கைது
லண்டன்: 9 மாடல் அழகிகளை ஸ்பெயின் நாட்டிற்கு கடத்தி வந்து தினசரி பாலியல் பலாத்காரம் செய்து 7 குழந்தைகளுக்கு தந்தையான லண்டன் கோடீஸ்வரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஷோஜா ஷோஜய் (வயது 56). இவர் லண்டன் நகரில் பல பெண்களை சந்திக்கும் ஷோஜய் அவர்களிடம் எல்லாம், நான் ஒரு எண்ணெய் வியாபாரி. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எனது நண்பர்கள் என்று கூறுவார். பின்பு கதை கதையாக கூறி சொத்து சுகத்தை காட்டி தான் வசிக்கும் ஸ்பெயின் நாட்டிற்கு அழைத்து செல்வார்.

மாடல் அழகிகளுக்கு வலை
இதுபோன்று ஷோஜயிடம் சிக்கிய மாடல் அழகிகளின் எண்ணிக்கை 9. அவர்களை மார்பெல்லா நகரில் உள்ள காசா சாப் எனப்படும் மலை பகுதியில் உள்ள 10 படுக்கை அறைகள் கொண்ட மாளிகைக்கு அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளார்.

தினசரி பலாத்காரம்
அரபு நாட்டு ஸ்டைலில் உருவான மாளிகையில் அவர்களை பலாத்காரம் செய்து அதன்மூலம் 7 குழந்தைகளுக்கு ஷோஜய் தந்தை ஆகி உள்ளார்.

பாலியல் புகார்
இந்த மாடல் அழகிகள் தங்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத்தினால் அவர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், கடைக்கு வெளியே செல்வதாக கூறிவிட்டு, பின்னர் ஸ்பெயின் காவல்நிலையத்தில் தன்னை செக்ஸ் அடிமையாக தொழிலதிபர் வைத்திருப்பதாக புகார் கொடுத்தார்.

தொழிலதிபர் கைது
அந்த புகாரின் பேரில் ஸ்பெயின் நாட்டு போலீசார் ஷோஜயை கைது செய்துள்ளனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 பெண்களும் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

மயக்கிய கோடீஸ்வரர்
பொய்யான வார்த்தைகளை கூறி தங்களை அவர் வசப்படுத்தி ஸ்பெயினுக்கு அழைத்து வந்ததாகவும், அங்கேயே தங்கியிருக்கும் வகையில் தங்களை மிரட்டி பணிய வைத்ததாகவும் குற்றச்சாட்டில் அவர்கள் கூறியுள்ளனர்.

பல நாட்டு அழகிகள்
ரஷ்யா, ஜெர்மனி, மங்கோலியா மற்றும் கஜக்ஸ்தான் போன்ற ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அவரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் மாடலிங் துறையில் பிரகாசிக்கும், லண்டன் நகர பேஷன் கல்வி அளிக்கும் பள்ளியில் படித்தவர்கள்.

உதவி செய்வதாக மயக்கிய ஷோஜாய்
பெண்களில் பலர், பேஷன் துறையில் பிரபலமாக உதவி செய்வதாக உறுதி அளித்து ஸ்பெயின் நாட்டிற்கு தங்களை அழைத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஈரான் நாட்டுக்காரர்
ஈரானில் பிறந்து கடந்த 2008ம் ஆண்டு இங்கிலாந்து பாஸ்போர்ட்டு பெற்ற ஷோஜய், ஷாஷா என்றும் அழைக்கப்படுகிறார்.
அந்த பெண்கள் அனைவரும் வெளியே செல்ல விரும்பும் இடங்களுக்கு எல்லாம் செல்ல அனுமதியுண்டு என்றும் ஆனால், எங்கு செல்கிறார்கள், திரும்புவது எப்பொழுது உள்ளிட்ட விசயங்களை தெரிவித்து விட்டு ஷோஜயின் கார் ஓட்டுனர்கள் கட்டுப்பாட்டிலேயே அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொழிலதிபர் மறுப்பு
எனினும், இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஷோஜய் கூறுகையில், அவர்கள் அனைவரும் எனது நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அழகிகளின் சம்மதம்
மேலும் அவர், அவர்கள் ஒப்புதலின் பேரிலேயே தன்னுடன் செக்ஸ் வைத்து கொண்டனர் என்றும், முன்னெச்சரிக்கை விசயங்களை மேற்கொள்ளாததால் அவர்கள் கர்ப்பமாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். அதனுடன், உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளை தான் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஸ்பெயின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications