"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்
டெல்லி: ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே ஒரு வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிக்கிய 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாயமான 3 இந்திய மாலுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய கிழக்கில் நிலைமை இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. அவ்வப்போது அமெரிக்கா- ஈரான் என இரு தரப்புமே தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே மீண்டும் அங்கு ஒரு பதற்றம் உருவாகியுள்ளது.

தாக்குதல்
அதாவது இன்று புதன்கிழமை, ஓமன் நாட்டின் சோஹர் துறைமுகத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் 'செட்டபெல்லோ' என்ற எண்ணெய் டாங்கர் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு ஏவுகணை அந்தக் கப்பலின் எஞ்சின் அறையைத் தாக்கியது. இதில் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக அந்தக் கப்பலில் இருந்து அபாய சிக்னல் அனுப்பப்பட்டது. பலாவு நாட்டின் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் மொத்தம் 28 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 24 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பெரும்பாலானோர் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், 3 இந்திய மாலுமிகள் மாயமாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
3 பேர் மாயம்
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள், "கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 இந்திய மாலுமிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு இந்தியா தனது கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
என்ன நடந்தது?
பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான 'ஆம்பிரே' இந்தத் தாக்குதலை ஆய்வு செய்து சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஈரான் தொடர்பான கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதற்காக அமெரிக்கக் கடற்படை ஒரு முற்றுகையை நடத்தியுள்ளது. இந்த முற்றுகையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், கப்பலின் பின்புறத்தைத் தாக்குவதற்கு முன்னதாக, ஊழியர்களைக் கப்பலின் முன்பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு, அதன் பிறகே எஞ்சின் அறையைத் தாக்கியுள்ளனர். அதேநேரம் இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்காவா இல்லை ஈரானா என்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஹார்முஸ்
உலகிலேயே மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்று 'ஹார்முஸ் நீரிணை'. உலகின் பெரும் பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தக் குறுகிய கடல் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஈரான் இந்த வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களைத் தடுக்க முயன்றதைத் தொடர்ந்து, வேறு எந்தவொரு கப்பலும் ஈரானை அணுக முடியாதபடி அமெரிக்கப் படைகளும் அங்கு முற்றுகையிட்டது. ஜூன் 8-ஆம் தேதி வரை, அமெரிக்கப் படைகள் விதிகளுக்குக் கீழ்ப்படியாத 7 கப்பல்களைச் செயலிழக்கச் செய்துள்ளன.. மேலும், 130-க்கும் மேற்பட்ட கப்பல்களைத் திருப்பி விட்டுள்ளன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாலுமிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. உலகின் பல்வேறு சர்வதேச வணிகக் கப்பல்களில் இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பலர் இந்த ஹார்முஸ் மோதலில் சிக்கி தவித்து வருகிறார்கள். கடந்த மே மாத இறுதியில் மஸ்கட் அருகே நடத்தப்பட்ட தாக்குதல், ஆண்டின் தொடக்கத்தில் ஓமனின் காசாப் துறைமுகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலிலும் இந்தியர்கள் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது?












Click it and Unblock the Notifications