இப்படி ஏமாந்த இஸ்ரேல்! 3D ஓவியத்தை தாக்க.. பல கோடி செலவு.. சொதப்பிய நெதன்யாகு
டெல் அவிவ்: ஈரான் மீது, இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில், ஈரானில் உள்ள ராணுவ ஹெலிகாப்டரை தாக்க, பல கோடி மதிப்பு கொண்ட தனது ஏவுகணையை இஸ்ரேல் ஏவியிருந்தது. ஆனால், உண்மையில் தாக்குதல் நடத்திய இடத்தில் அப்படியான ஹெலிகாப்டர் இல்லை. அது தரையில் வரையப்பட்டிருந்த 3D ஓவியம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இஸ்ரேல் மூக்குடைந்து போயிருக்கிறது.
ஈரானை காலி செய்ய வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கம். எனவே அமெரிக்காவுடன் சேர்ந்துக்கொண்டு சரமாரியான தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், இந்த தாக்குதலில் மண்டை மீது இருந்த கொண்டையை இஸ்ரேல் மறைக்க மறந்துவிட்டது.

என்ன நடந்தது?
ஈரானிடம் அதிக அளவில் Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. போர் களத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் ரொம்ப முக்கியம். எனவே இந்த ஹெலிகாப்டரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.150 கோடி. இதனை தாக்கி அழிக்க இஸ்ரேல் பயன்படுத்திய spike/pop-eye ரக ஏவுகணையின் விலை ரூ.1.5 கோடிதான். அந்த வகையில் பார்த்தால் சிறிய கல்லை வைத்து பெரிய மலையை தகர்ப்பது போன்றதாகும்.
மண்டை மேல் இருந்த கொண்டை
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டிருந்தது. ஆனால், இங்குதான் டிவிஸ்ட். உண்மையில் இஸ்ரேல் தாக்கியது ஹெலிகாப்டரை கிடையாது. தரையில் வரையப்பட்டிருந்த 3D ஹெலிகாப்டர் ஓவியத்தின் மீதுதான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வெறும் ரூ.4,000 செலவு செய்து வரையப்பட்ட ஓவியத்தை தாக்க இஸ்ரேல் ரூ.1.5 கோடியை செலவு செய்திருக்கிறது. இது தொடர்பான வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக விவாதமாகியிருக்கிறது.
விஷயம் வெளியில் தெரிந்த நிலையில், இஸ்ரேல் அவசர அவசரமாக இந்த தகவல்களை மறுத்திருக்கிறது. வெளியான வீடியோ பழையது என்று விளக்கமளித்திருக்கிறது.
பொருளாதார சுமையில் இஸ்ரேல்
எப்படி இருந்தாலும் இஸ்ரேல், இந்த போரில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. குறிப்பாக, ஈரான் shahed-136 ரக ட்ரோன்களை பயன்படுத்துகிறது. இதன் விலை வெறும் ரூ.42 லட்சம்தான். ஆனால், இதை தடுக்க இஸ்ரேல் பயன்படுத்தும் patriot ரக ஏவுகணையின் விலை ரூ.33 கோடி. அதாவது இந்த போரில் ஈரான் ஒரு ரூபாய் செலவிட்டால், இஸ்ரேல் 20 ரூபாயை செலவிடுகிறது. 1:20 என்கிற நிலையில் இரு நாடுகளின் செலவுகளும் இருக்கின்றன.
חיל האוויר ממשיך לפגוע ביכולות האוויריות של המשטר האיראני: סוכלו חיילים איראנים שהפעילו מערכות הגנה אווירית נגד מטוסי חיל האוויר pic.twitter.com/f6hg6FV5at
— צבא ההגנה לישראל (@idfonline) March 4, 2026
செலவு ரொம்ப அதிகம்
இது வெறும், ட்ரோன் தாக்குதலை சமாளிக்க மட்டும்தான். அதுவே, ஏவுகணை தாக்குதலை சமாளிக்க இன்றும் அதிகமாக இஸ்ரேல் செலவு செய்கிறது. ஈரான் ஏவும் ஏவுகணையின் விலை ரூ.85 லட்சம். ஆனால், அதை தடுக்க இஸ்ரேல் ரூ.29 கோடியை செலவு செய்கிறது. இந்த போரின் முதல் 100 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ரூ.31,000 கோடியை செலவு செய்திருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு ரூ.7,500 கோடியை செலவழித்திருக்கிறது.
வெறும் இரண்டு நாட்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ரூ.15,000 கோடியை செலவிடுகிறது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகைக்கு ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை விட இது அதிகம். மகளிர் உரிமை தொகைக்கு மாதம் ரூ.13,807 கோடி மட்டுமே செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications