மலேசிய விமானம் மாயமான பிறகும் தொடர்பில் இருப்பதாக பொய் சொன்னது யார்?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் வேண்டும் என்றே வழக்கத்திற்கு மாறான பாதையில் சென்றுள்ளது. அவ்வாறு விமானம் பாதை மாறிச் செல்ல ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் யாரோ உதவி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகமோ, பயணிகளின் உடலோ கிடைக்கவில்லை
விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

மாயம்
விமானம் வேண்டும் என்றே வழக்கத்திற்கு மாறான பாதையில் சென்றதாக விபத்து குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராடார்
விமானத்தை ராடாரில் இருந்து மறையச் செய்ய யாரோ டிரான்ஸ்பான்டரை சுவிட் ஆப் செய்துள்ளனர். அதற்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர் யாரோ உதவியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

வியட்நாம்
மலேசிய விமானத்தை ஒரு முறை ராடாரில் பார்த்தோம். ஆனால் சில நிமிடங்களில் அது ராடாரில் இருந்து மாயமானது என்று வியட்நாம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ்
விமானம் ராடாரில் இருந்து மாயமாகி 45 நிமிடங்கள் கழித்து அதை நினைத்து வியட்நாம் அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். அந்நேரம் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன மையத்தில் இருந்து, விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது. அது கம்போடியாவில் பறக்கிறது என்று வியட்நாம் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்.ஹெச். 370
விமான கேப்டன் கடைசியாக அதிகாலை 1.19 மணிக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். ஆனால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன மையத்தில் இருந்து யாரோ அதிகாலை 2.35 மணிக்கு கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகர ஊழியர்களை தொடர்பு கொண்டு மலேசிய விமானத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தகவல்
மலேசியன் ஏர்லைன்ஸ் மையத்தில் இருந்து விமானத்திற்கு தப்புத் தப்பாக டைப் செய்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராடாரில் பார்க்க முடியாததால் ஹோ சி மின் நகரில் புகார் அளித்துள்ளனர். உடனே அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று விமானத்திற்கு அனுப்பிய தகவல் அதை சேரவே இல்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications