பிரஸ்ஸல்ஸில் மாயமான சென்னையைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் உயிரிழப்பு !
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு மாயமான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக பெல்ஜியம் நாட்டு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த 22 ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

பிரஸ்ஸெல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது, இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம் ஸ்கைப் மூலம் அவர் பேசியுள்ளார். இதையடுத்து அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் ராகவேந்திரன் கணேசனும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவரது உடல் பெல்ஜியம் அதிகாரிகளால் இன்று அடையாளம் காணப்பட்டது. இறந்துபோன கணேசனின் உடல் அம்ஸ்டர்டாம் வழியாக இந்தியா கொண்டு வரப்படும் என பெல்ஜியத்துக்கான இந்திய தூதர் மாஞ்சீவ் சிங் புரி கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்துக்காக ராகவேந்திரன் கணேசன் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரஸ்ஸெல்ஸில் பணியாற்றி வந்துள்ளார். கணேசனின் மனைவி சென்னையில் வசிக்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க கணேசன் கடந்த மாதம் சென்னை வந்து சென்றுள்ளார். உயிரிழந்த ராகவேந்தின் குடும்பத்துக்கு இன்போசிஸ் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications