மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது: தற்போதைய தகவல்கள்
பெய்ஜிங்: மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மாயமாக தாங்கள் தான் காரணம் என்று சீனாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி 239 பயணிகளுடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 சீனாவுக்கு சென்றது. அந்த விமானம் சீன கடற்பகுதியில் மாயமானது. விமானம் என்ன ஆனது, அதில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது அதை தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் விமானம் மாயமானதற்கு தாங்கள் தான் காரணம் என்று சீனாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான சைனீஸ் மார்டயர்ஸ் பிரிகேட் இமெயில் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த அமைப்பு பொய் சொல்லக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

மாயமான விமானத்தில் இரண்டு பேர் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்தது. அதில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயது வாலிபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் எந்த ஒரு தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு நபரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க நியூசிலாந்து அரசு அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தான பி-3 ஓரியான் என்ற விமானத்தை அனுப்பி வைக்கவிருக்கிறது.
இதற்கிடையே மாயமான விமானம் வெடித்துச் சிதறியதா என்பதை கண்டறியும் முயற்சியில் அணு ஆயுத சோதனை நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications