ஓமனில் பாதிப்புக்குள்ளாகும் இந்தியர்களுக்காக புதிய மொபைல் 'ஆப்' அறிமுகம்
மஸ்கட்: ஓமனில் பாதிப்புக்கு உள்ளாகும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் புதிய செயலி(செல்போன் அப்ளிகேஷன்) ஒன்றை வெள்ளிக்கிழமை இந்திய தூதர் இந்திர மணி பாண்டே அறிமுகம் செய்து வைத்தார்.
ஓமன் நாட்டில் வேலைக்காக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அந்த தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் முறையாக சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்குவதில்லை. இதனால் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

இது குறித்து சிந்தித்த சமூக ஆர்வலர்கள் இந்த புதிய செயலியினை உருவாக்கினர். இந்த புதிய செயலியினை மஸ்கட்டில் நடந்த விழாவில் இந்திய தூதர் இந்திர மணி பாண்டே அறிமுகம் செய்தார்.
இந்த செயலியினை ஆப் வசதி கொண்ட போனில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மிக் கால் என்று பெயரிடப்பட்ட இந்த செயலியில் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரக உதவி எண், இந்திய அமைப்புகளின் தொடர்பு எண்கள், இந்திய அரசின் உதவி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதனை ஓமன் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த நாடுகளின் இந்திய தூதரகங்களின் தொடர்பு எண்களும் இந்த ஆப்பில் கிடைக்கும். மேலும் போலீஸ், அவசர உதவி சேவை உள்ளிட்ட தொடர்பு எண்களும் இதில் அடங்கும்.
இந்த செயலி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் இருக்கிறது. மேலும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு செல்லும் வழியினை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலி மிகவும் பயனுடையதாக இருக்கும் என பத்திரிகையாளர் கே. ரெஜிமோன், இந்திய வர்த்தகர் ஜோஸ் சாக்கோ, சமூக சேவகர்கள் சமீர் மற்றும் பஷீர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும் என கூறினர். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் தேவைப்படும் நேரத்தில் இந்த செயலி அவர்களின் தேவையை நிறைவு செய்யும் என தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications