பாகிஸ்தானில் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை மையம் கொண்டு இன்று மதியம் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.1ஆக பதிவாகியிருந்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின, வீட்டில் இருந்த பொருட்கள் ஆடின. பொதுமக்கள் பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இருப்பினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த வாரம் 4.9 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து ஒருவர் உயிரிழந்தார், 30 பேர் காயமடைந்தனர். கடந்தாண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 500 பேர் பலியாகினர். 2005ம் ஆண்டு 7.6 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 73 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications