அமெரிக்க "காங்கிரஸில்" வைத்து காங்கிரஸுக்குக் கட்டையைக் கொடுத்த மோடி.. !
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ஜாலியான மற்றும் கேஷுவலான பேச்சால் உறுப்பினர்களைக் கவர்ந்து விட்டார். தொடர்ந்து கைதட்டியபடி மோடி பேச்சை கேட்டு ரசித்தனர் அமெரிக்க எம்.பிக்கள். பலமுறை எழுந்து நின்றும் அவர்கள் கரகோஷம் எழுப்பினர். மோடி தனது பேச்சின்போது காங்கிரஸ் கட்சிக்கும் கட்டையைக் கொடுக்கத் தவறவில்லை. இது அமெரிக்க எம்.பிக்களிடையே குபீர் சிரிப்பை வரவழைத்தது.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்த மோடி, அங்கு அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார். வர்த்தக பிரமுகர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சுக்கு அமெரிக்க எம்.பிக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சிரித்தபடியும், கைதட்டியபடியும் மோடி பேச்சைக் கேட்டு ரசித்தனர்.

இரு நாடுகளின் வரலாறுகளையும் விவரித்துப் பேசிய மோடி ஆங்காங்கே நகைச்சுவையைக் கலந்தும் பேசியதால் அமெரிக்க எம்.பிக்கள் மோடி மீது "இம்ப்ரஸ்" ஆகி விட்டனர்.
மோடி பேச்சில் இழையோடிய நகைச்சுவையில் நம்ம ஊர் காங்கிரஸ் கட்சியும், ராஜ்யசபாவும் இடம் பெறத் தவறவில்லை. பெயரைக் கூறாமல் காங்கிரஸையும், எதிர்க்கட்சிகளையும் வாரி விட்டுப் போனார் மோடி. அதிலிருந்து சில...
அமெரிக்க நாடாளுமன்றம் ஒற்றுமையுடன் செயல்படுவதாக என்னிடம் சொல்லப்பட்டது. அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் தனியாக இல்லை. இதேபோன்ற ஒற்றுமையை நான் இந்திய நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து கண்டு வருகிறேன். குறிப்பாக எங்களது ராஜ்யசபாவில் என்று மோடி கூறியபோது எம்.பிக்களிடையே சிரிப்பலை எழுந்து அடங்கியது.
அமெரிக்காவைப் போலவே நமது மேல் சபையிலும் (ராஜ்யசபா) ஆளுங்கட்சிக்கு மெஜாரிட்டி கிடையாது. எதிர்க்கட்சிகள்தான் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்காவைப் போலவே இங்கும் எதிர்க்கட்சிகள் முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கும், சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் பல்வேறு வகையில் இடையூறு செய்வதையே மோடி இப்படி மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மோடியின் பேச்சின்போது எட்டு முறை அமெரிக்க எம்.பிக்கள் எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினர். அதேபோல கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட முறை அவர்கள் கைதட்டி மோடி பேச்சை ரசித்தனர்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications