மியான்மரில் ஜனநாயகத்திற்காக பாடுபட்ட ஆங் சான் சூ கியை சந்தித்த மோடி
நாபிடா: மியான்மர் எதிர்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள மியான்மர் சென்றார். அங்கு அவர் மியான்மர் எதிர்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கியை(69) புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது சூ கி மோடியிடம் இந்தியா தனது இரண்டாவது வீடு என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் இந்தியாவில் இருந்த காலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

மியான்மரை ஆண்டு வந்த ராணுவத்தை எதிர்த்து போராடிய சூ கியை மோடி ஜனநாயகத்தின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்யது அக்பருத்தீன் கூறுகையில்,
சூ கி மோடியிடம் இந்தியாவை புகழ்ந்து பேசினார். மியான்மரில் இருந்து அவர் முதன்முதலாக சென்ற வெளிநாடு இந்தியா தான் என்று கூறினார் என்றார்.
மோடி சூ கிக்கு பகவத் கீதையை பற்றி மகாத்மா காந்தி எழுதிய கருத்துகள் அடங்கிய புத்தகத்தை பரிசளித்தார். சூ கி டெல்லியில் தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அவர் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications