உலக அரசியலில் புதிய அத்தியாயம்.. சீனாவில் மோடி- பிங்- புதின் மீட்டிங்! உருவாகிறதா மூன்றரசு அணி?
பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசியது உலக அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு அடாவடிக்கு எதிராக 'மூன்றரசு அணி' உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக அரசியலில் புதிய அத்தியாயம் என்கின்றனர் உலகளாவிய பொருளாதார நிபுணர்கள்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பது சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலக சந்தையையும் பாதிக்கும் வகையில் இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், சீனாவில் நடந்த முக்கிய உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங், ரஷ்ய அதிபர் வ்லாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீனா மாநாடு
இந்த சந்திப்பு, அமெரிக்கா மேற்கொண்ட கடுமையான வர்த்தக நடவடிக்கைகளுக்கான எதிர் நடவடிக்கையாய் தான் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தனது உள்நாட்டு தொழில்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், உள்நாட்டு இளைஞர்களு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிராக அதிக வரி விதித்துள்ளதாகப் பார்க்கப்படுகிற. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், எஃகு, நகை, துணி உற்பத்திகள் போன்ற துறைகளில் அமெரிக்க சந்தை, பெரிதும் இந்தியாவையே சார்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடி - புடின் - ஜின்பிங்
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில், மோடி - ஜி ஜின் பிங் - புதின் சந்திப்பு, வர்த்தகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாக அல்லாமல், உலக அரசியல் சமநிலையை மாற்றக் கூடிய ஒன்று எனக் கருதப்படுகிறது. சீனா, ஏற்கனவே அமெரிக்காவுடன் பல வர்த்தக போர்களில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வர்த்தகம்
இந்நிலையில், இந்தியா, இப்போது புதிய சவாலாக அமெரிக்காவின் அதிக வரியை சந்தித்துள்ள சூழலில் மூன்று பெரிய நாடுகள் ஒன்றிணைவது, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலுவான "மூன்றரசு அணி" உருவாக்குமா என உலக நாடுகள் கவனித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் நடுநிலையாக இருக்க விரும்பினாலும், வர்த்தக சமநிலை குலைந்தால் அந்த அணியும் பாதிக்கப்படும். எனவே அந்நாடுகளும் இந்த அணிக்கு துணை நிற்கலாம்.
ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி.. கூடவே ஜின்பிங்.. ஆஹா.. டிரம்ப் கண்ணை உறுத்துமே!
உலக அரசியல்
மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் நெருக்கமாக இருப்பதால், அமெரிக்கா எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவை அமெரிக்காவின் கூட்டாளிகள் என்பதால், இந்த கூட்டணிக்கு எதிராக நிற்க வாய்ப்பு அதிகமுள்ளது. தற்போதைக்கு, குறுகிய காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி குறையக்கூடும் என்பதால், தங்கம், எஃகு, நகை போன்றவற்றின் விலை அதிகரிக்கலாம்.
மூன்றரசு அணி
ஆனால் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து புதிய சந்தைகளை உருவாக்க இந்தியா முயற்சி செய்தால், அமெரிக்கா மீதான சார்பு குறையும். தற்போது, அமெரிக்கா விதித்த 50% வரி, உலக வர்த்தகத்தையே அதிரவைத்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவில் நடந்த மோடி - ஜின் பிங் - புதின் சந்திப்பு, "அமெரிக்காவுக்கு எதிரான மூன்று பெரிய சக்திகள் சந்திப்பு" என உலக நாடுகள் மதிப்பிடுகின்றன. இது எதிர்காலத்தில் சர்வதேச அரசியல் வரைபடத்தை மாற்றக்கூடிய மிகப் பெரிய முன்னேற்றமாக மாறுமா? என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பு..
-
ஈரான் - அமெரிக்கா போரால் நெருக்கடி.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்! ஆலோசித்தது என்ன? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications