இந்தியத் தொழிலாளர்களை சந்தித்தார் மோடி

Subscribe to Oneindia Tamil

துபாய்: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, முசப்பா லேபர் கேம்ப் பகுதியில் உள்ள இந்திய தொழிலாளர்களை நேரில் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமீரகம் சென்றுள்ளார். அங்கு முதல் நிகழ்ச்சியாக ஷேக் ஜாயித் கிராண்ட் மஸ்ஜிதைப் பார்வையிட்ட மோடி, பின்னர் அருகிலுள்ள முசப்பா லேபர் கேம்ப் பகுதியில் இந்திய தொழிலாளர்களைச் சந்தித்தார்.

Modi visits UAE labour camp, underscores concern over worker welfare

அங்கு 300 இந்தியத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய மோடி, அவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் பணியிட சூழல்களைக் குறித்து நேரில் நலம் விசாரித்தார். அவர்களின் நலன் குறித்து மத்திய அரசு அக்கறையுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமீரகத்தில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியை கைதட்டி இந்தியத் தொழிலாளரக்ள் வரவேற்று மகிழ்ந்தனர்.

இன்று துபாயில் கிட்டத்தட்ட 50,000 இந்தியர்களைச் சந்தித்து உரையாற்றுகிறார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+