ஒரே நிமிஷம்தான்..மோனலிசா ஓவியம் மீது கேக்கை வீசிய மூதாட்டி? செக் பண்ணி பார்த்தா அதிர்ச்சி ட்விஸ்ட்!
பாரிஸ்: பாரிசில் இருக்கும் மோனலிசா ஓவியம் மீது கேக் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
உலகில் மிகவும் விலை உயர்ந்த, அதிகம் மதிக்கப்படும் ஓவியங்களில் ஒன்றுதான் மோனலிசா ஓவியம். இத்தாலி ஓவியர் லியானார்டோ டாவின்சி மூலம் வரையப்பட்ட ஓவியங்களில் தலைசிறந்த ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
1503ல் இந்த ஓவியம் வரையப்பட்டது. 77 cm x 53 cm உருவம் கொண்டது இந்த ஓவியம் ஆகும்.

பிரான்ஸ்
தற்போது பிரான்சின் பாரிசில் உள்ள Lourve மியூசியத்தில் இந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்லாயிரம் பேர் வந்து ஓவியத்தை பார்த்துவிட்டு செல்கிறார்கள். உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் எழுதப்பட்ட, அதிகம் காப்பி அடிக்கப்பட்ட ஓவியம்தான் இந்த மோனலிசா ஓவியம் ஆகும். இந்த நிலையில் நேற்று அந்த ஓவியத்தை பார்க்க மூதாட்டி ஒருவர் வீல்சேரில் வந்து இருந்தார். ஓவியம் அருகே அமர்ந்து அவர் சில நிமிடம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

மோனலிசா ஓவியம்
திடீரென வீல் சேரில் இருந்து எகிறி குதித்து உள்ளே போய்.. அந்த ஓவியத்தின் கண்ணாடி உரையை உடைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அந்த கண்ணாடி புல்லட் பாதுகாப்பு கண்ணாடி ஆகும். இதனால் அந்த கண்ணாடியை அந்த மூதாட்டியால் உடைக்க முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கண்ணாடியை அவர் உடைக்க முடியாத நிலையில், பாக்கெட்டில் இருந்த கேக்கை வெளியே எடுத்தார்.

யார் அவர்?
கேக்கை வெளியே எடுத்து அப்படியே அந்த கண்ணாடி மீது அப்பினார். அந்த கேக்கை அவர் ஓவியம் மீது வீச வைத்து இருந்தார். கண்ணாடி இருந்ததால்.. ஓவியம் மீது படாமல் கண்ணாடி மட்டும் சேதம் அடைந்தது. இதனால் அந்த ஓவியம் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. இதையடுத்து உடனே அங்கு ஓடி வந்த போலீசார் அந்த மூதாட்டியை பிடித்து இழுத்தனர். சோதித்து பார்த்ததில், அந்த மூதாட்டி மூதாட்டியே இல்லை.

இளைஞர் கைது
அது விக் வைத்த இளைஞர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாவலர்களை ஏமாற்றி மூதாட்டி போல உள்ளே வந்து இருக்கிறார். அவரிடம் விசாரித்ததில்.. இந்த பூமி அழிந்து கொண்டு இருக்கிறது. ஓவியம்தான் உங்களுக்கு முக்கியமா? உலகத்தை காப்பாற்றுங்கள் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கண்ணாடி மீது பட்ட கேக் கறையை அங்கிருக்கும் அதிகாரிகள் துடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications