காட்டுத்தீயில் கருகிய 100 பேர்.. சிலியில் தொடரும் மரண ஓலம்! ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசம்
சாண்டியாகோ: தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் ஏற்பட்டு உள்ள காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி இருக்கிறது.
தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத் தீ காரணமாக அங்கு பல ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் தீக்கிரையாகி உள்ளன. தீயணைப்பு துறையினருக்கு காட்டுத் தீ தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அதி வேகத்தில் காற்று வீசியதன் காரணமாக தீ வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்கள் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, மேல் பரப்பில் இருந்து நீர் ஊற்றப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காட்டுத் தீ அச்சுறுத்தல் அதிகம் உள்ள இடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 200 க்கும் அதிகமாக இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் வனப் பகுதிகள் தீயில் கருகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்த நிலையில் நேற்று இந்த பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயில் கருகி உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த காட்டு தீயின் காரணமாக சிலி நாட்டின் கடற்கரை நகரங்களை சாம்பல் புகை சூழ்ந்து இருக்கிறது. அடர்ந்த மூடுபனி போல காணப்படும் இந்த புகையின் காரணமாக சிலி நாட்டின் மத்திய பகுதியான வினா டெல் மார், வால்பரைசோவில் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த மக்கள் வீடுகளை வெளியேறி இருக்கிறார்கள். இந்த பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போதிய தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
ஒரு பக்கம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான விசாரணையும் மறு பக்கம் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகளுக்கு இடையிலான உராய்வுகளே இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications