80-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்.. நள்ளிரவில் குலுங்கிய தைவான்.. பீதியில் உறைந்த மக்கள்
தைபே: தைவானில் அடுத்தடுத்து 80 க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடு தைவான். புவியின் 2 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் தைவான் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக தைவான் உள்ளது. இந்த நிலையில், தைவானில் திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர். அதிபகட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தலைநகர் தைபே உள்ளிட்ட இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பலரும் தீடிரென வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சியில் உறைந்தனர். ஹூலைன் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதே இடத்தில் தான் கடந்த 3 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 14 பேர் பலியாகினர்.
ஏப்ரல் 3 ஆம் தேதியில் இருந்தே அங்கு தொடர்ந்து அதிர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், நள்ளிரவில் சக்திவாய்ந்த 6.2 என்ற அளவில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சில இடங்களில் மட்டும் கட்டிடங்கள் லேசான சேதம் அடைந்து இருப்பதாகவும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தைவான் அதிகாரிகள் கூறினர்.
தைவானில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல், 1999-ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு மிக சக்தி வாய்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications