பேரழிவுக்கான சமிக்ஞையா? ஜப்பானில் ஒரே இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான காக்கைகள் - 'ஷாக்'
இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2004-இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்பும், ஜப்பானில் 2011-இல் நேரிட்ட சுனாமிக்கு முன்பும் அதிக அளவிலான காக்கைகளும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக பறந்து சென்றதை பலரும் பார்த்தனர்.
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் குவிந்தததால் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக காக்கைகள் உள்ளிட்ட பறவைகளுக்குதான் ஏதேனும் பேரிடர் நிகழப் போவதை முன்கூட்டியே உணரும் திறன் உண்டு. எனவே, காக்கைகள் ஒரே இடத்தில் குவிந்தததால் இயற்கை பேரழிவு ஏதேனும் நடக்கப் போகிறதா என்ற அச்சத்தில் ஜப்பான் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே 2011இல் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் அதில் இருந்து இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் காக்கைகள் ஒரே இடத்தில் குவிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாடுகளை நிலைக்குலையச் செய்துள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்துக்கு பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனிடையே, துருக்கி, சிரியாவுடன் நிலநடுக்கம் நின்றுவிடாது என்றும், ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளும் (இந்தியா, ஜப்பான் உட்பட) பயங்கர நிலநடுக்கத்தை விரைவில் எதிர்கொள்ளும் என பிரபல ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹூகர்பீட்ஸ் எச்சரித்துள்ளார்.

சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்
இவரது எச்சரிக்கையை அவ்வளவு எளிதில் புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில், துருக்கி, சிரியவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பல நாட்களுக்கு முன்னரே கணித்து சொன்னவர்தான் பிராங் ஹூகர்பீட்ஸ். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, கடந்த வாரம் அசாமில் லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதனால் ஒரு பேரிடர் தாக்கப்போகும் அச்சத்தில்தான் ஆசிய நாடுகள் இருக்கின்றன.

ஒன்றுகூடிய காக்கைகள்
இந்த நிலையில் ஜப்பானில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் கூடிய விசித்திர நிகழ்வு நடந்திருக்கிறது. ஜப்பானின் கியோட்டோ தீவுக்கு அருகே உள்ள ஹோன்ஷு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காக்கைகள் ஒரே இடத்தில் சூழ்ந்து சத்தமாக கரைந்து கொண்டிருந்தன. அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் காக்கைகளே நிரம்பியிருந்தன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

என்ன அர்த்தம்?
பொதுவாகவே நிலநடுக்கம், சுனாமி, கடல் சீற்றம், புயல் போன்ற பேரிடர்களை காக்கைகள் உள்ளிட்ட பறவைகளும், நாய், பூனை போன்ற விலங்குகளும் முன்கூட்டியே உணர்ந்துவிடும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2004இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்பும், ஜப்பானில் 2011-இல் நேரிட்ட சுனாமிக்கு முன்பும் அதிக அளவிலான காக்கைகளும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக பறந்து சென்றதை பலரும் பார்த்தனர். அப்படியிருக்கையில், ஆயிரக்கணக்கான காக்கைகள் ஓரிடத்தில் ஒன்றுகூடிய நிகழ்வை எளிதில் கடந்து செல்ல முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இதற்கான அர்த்தத்தை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications