எல்லாமே போச்சு.. நடுங்க வைக்கும் மொராக்கோ.. 2000 தாண்டிய பலி.. உலுக்கி போட்ட பூகம்பம்!
ரபாத்: மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 2,012 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,059 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, உடனடியாக 400 பேர் பலியானார்கள். தற்போது பலி எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,012 ஐ தாண்டி உள்ளதாகவும் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல வீடற்றவர்களாக இருந்தனர். அந்நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமையன்று நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்தனர்.

இராணுவத்தின் அறிக்கையின்படி, மொராக்கோவின் அரசர் ஆறாம் முகமது, தீவிர தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனையையும் உடனே களமிறக்க ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு ராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோவின் ஹை அட்லஸ் மலைகளை உலுக்கிய நிலநடுக்கம்தான் இந்த சேதத்திற்கு மிகப்பெரிய காரணம். அந்நாட்டு வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் இதுவும் ஒன்றாகும். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியின் மையப்பகுதிக்கு மிக நெருக்கமான நகரமான மராகேஷில் இதனால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கே உள்ள வரலாற்று கட்டமைப்புகள் இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. பெரும்பாலான உயிரிழப்புகள் தெற்கே உள்ள அல்-ஹவுஸ் மற்றும் டாரூடன்ட் மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கேதான் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பணிகள் அங்கே நடந்து வருகின்றன. மொரோக்காவில் நிலநடுக்கம் 03:41:01 (UTC+05:30) மணிக்கு 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு தெற்கில் உள்ள சிடி இஃப்னியிலிருந்து வடக்கிலும் அதற்கு அப்பாலும் உள்ள ரபாத் வரை ஏற்பட்டது.
முக்கிய பொருளாதார மையமான மராகேஷுக்கு மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. தற்போது இங்கே மீட்பு பணிகளை செய்வதற்காக 1500 டென்ட் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கே 40 ஆயிரம் பேர் வரை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்னும் வீடு இல்லாமல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வெளியே சிக்கி தவித்துக்கொண்டு இருக்கின்றனர், இந்திய பிரதமர் மோடி இதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் மக்கள் பலர் உயிர் இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பிற்குச் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை முதற்கட்ட தகவல்கள் தான் என்றும் இது மேலும் அதிகரிக்கும் என்பதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகமே தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications