நொறுங்கிய மக்கள்.. குலை நடுங்க வைக்கும் மொராக்கோ.. 2100ஐ தாண்டிய பலி.. காவு வாங்கிய பூகம்பம்!
ரபாத்: மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100-ஐ தாண்டியது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 2122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,370 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோவின் ஹை அட்லஸ் மலைகளை உலுக்கிய நிலநடுக்கம்தான் இந்த சேதத்திற்கு மிகப்பெரிய காரணம். அந்நாட்டு வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் இதுவும் ஒன்றாகும். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியின் மையப்பகுதிக்கு மிக நெருக்கமான நகரமான மராகேஷில் இதனால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அங்கே உள்ள வரலாற்று கட்டமைப்புகள் இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. பெரும்பாலான உயிரிழப்புகள் தெற்கே உள்ள அல்-ஹவுஸ் மற்றும் டாரூடன்ட் மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கேதான் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தாமதம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கம்: 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, உடனடியாக 400 பேர் பலியானார்கள். தற்போது பலி எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,012 ஐ தாண்டி உள்ளதாகவும் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல வீடற்றவர்களாக இருந்தனர். அந்நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமையன்று நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்தனர்.
இராணுவத்தின் அறிக்கையின்படி, மொராக்கோவின் அரசர் ஆறாம் முகமது, தீவிர தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனையையும் உடனே களமிறக்க ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு ராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
அச்சம்: அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பிற்குச் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை முதற்கட்ட தகவல்கள் தான் என்றும் இது மேலும் அதிகரிக்கும் என்பதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகமே தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பணிகள் அங்கே நடந்து வருகின்றன. மொரோக்காவில் நிலநடுக்கம் 03:41:01 (UTC+05:30) மணிக்கு 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு தெற்கில் உள்ள சிடி இஃப்னியிலிருந்து வடக்கிலும் அதற்கு அப்பாலும் உள்ள ரபாத் வரை ஏற்பட்டது.
முக்கிய பொருளாதார மையமான மராகேஷுக்கு மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. தற்போது இங்கே மீட்பு பணிகளை செய்வதற்காக 1500 டென்ட் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கே 40 ஆயிரம் பேர் வரை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்னும் வீடு இல்லாமல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வெளியே சிக்கி தவித்துக்கொண்டு இருக்கின்றனர், இந்திய பிரதமர் மோடி இதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் மக்கள் பலர் உயிர் இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
-
சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடங்கள்! அலறி ஓடிய மக்கள்.. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பதற வைக்கும் காட்சிகள் -
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications