"ஸ்லீப்பர் செல்கள்.." உத்தரவு வந்த மறுநொடி ஐரோப்பாவில் கொடூர தாக்குதல்? ஹமாஸை அம்பலப்படுத்திய மொசாட்
டெல் அவிவ்: ஐரோப்பாவில் தாக்குதல்களை நடத்த ஹமாஸ் சீக்ரெட் நொட்வொர்க்கை உருவாக்கி வருவதாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பாவில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பலர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொசாட் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே போர் நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். டிரம்பின் நீண்ட முயற்சிக்கு பிறகே இந்த போர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதேநேரம் ஹமாஸ் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து விசாரித்தே வருகிறது. இதற்கிடையே ஐரோப்பாவில் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டு வருவதாகவும் மொசாட் எச்சரித்துள்ளது.

மொசாட் பகீர்
அதாவது ஐரோப்பா முழுவதும் ஹமாஸ் சீக்ரெட் ஆபரேஷனுக்கான நெட்வொர்க்கை உருவாக்கி வருவதாக இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. மறைமுகக் குழுக்கள் வழியாக ஹமாஸ் இந்த திட்டத்தைச் செயல்படுவதாகவும் மொசாட் கூறியிருக்கிறது..
ஐரோப்பிய பாதுகாப்புப் படைகள் அளித்த ஒத்துழைப்பால் அங்குப் பல இடங்களில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில திட்டமிட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன என்று மொசாட் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் வாழும் இஸ்ரேல் மற்றும் யூத மக்களைக் குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்ட சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி கைது
ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைகளால் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
கடந்த செப்டம்பரில் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா என்ற பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கொண்ட ஆயுதக் கிடங்கைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தான் இதில் ஹமாஸின் மூத்த அரசியல் பிரிவு அதிகாரி பஸ்ஸம் நைமின் மகன் முகமது நைமுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொசாட் சொல்வது என்ன
இந்த பஸ்ஸம் நைமுக்கு, காசாவில் உள்ள ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யாவுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மொசாட் அமைப்பு இது தொடர்பாகக் கூறுகையில், "கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமை பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது இது முதல் முறை அல்ல.. ஆனால், சர்வதேச அரங்கில் தங்கள் நற்பெயரைக் காக்க இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என ஹமாஸ் பொய் சொல்கிறது.
முகமது நைம் மற்றும் அவரது தந்தை செப்டம்பர் மாதம் கத்தாரில் சந்தித்தனர். ஐரோப்பாவில் நடக்கும் சீக்ரெட் ஆபரேஷனுக்கும் ஹமாஸ் ஆதரவு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. அல்லது மூத்த தலைவர்கள் எதிர்ப்பை மீறி இதுபோன்ற சம்பங்கள் ஹமாஸில் நடக்க ஆரம்பித்துவிட்டதையே காட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தீவிரம்
ஐரோப்பிய அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். உதாரணமாக ஜெர்மனியில் அதிகாரிகள், ஹமாஸுக்கு ஆதரவாக நிதி திரட்ட உதவியதாக சந்தேகிக்கப்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத நிறுவனங்களை குறிவைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆரம்பித்ததில் இருந்தே.. ஹமாஸ் தனது வெளிநாட்டு நடவடிக்கைகளையே தீவிரப்படுத்தியதாக மொசாட் கூறுகிறது. ஈரானைப் போலவே சீக்ரெட் ஆப்ரேடிவ் நெட்வொர்க்கை உருவாக்கும் முயற்சியில் ஹமாஸ் ஈடுபட்டுள்ளதாகவும் மொசாட் குற்றஞ்சாட்டுகிறது. மொசாட்டின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஹமாஸ் தரப்பு இதுவரை எந்தவொரு விளக்கம் அல்லது மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications