இதுதான் இஸ்ரேல்.. ஹிஸ்புல்லா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய மொசாட்! யூனிட் 8200 உளவு படை பற்றி தெரியுமா
டெல் அவிவ்: லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது முதலில் பேஜர்கள், அடுத்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.. இது ஒட்டுமொத்த ஹிஸ்புல்லா அமைப்பையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதைப் பல மாதங்கள் ஸ்கெட்ச் போட்டு இஸ்ரேல் உளவு அமைப்பான மெசாட் நடத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பேஜர்களும் சரி, வாக்கி டாக்கிகளும் சரி இப்போதெல்லாம் பழங்காலத்துத் தகவல்தொடர்பு சாதனமாகவே பார்க்கப்படுகிறது. வாக்கி டாக்கிகளை கூட நாம் சினிமாக்களில் பார்த்து இருப்போம். அல்லது போலீசாரிடம் பார்த்து இருப்போம்.

தாக்குதல்: ஆனால், பேஜர்களை எல்லாம் நாம் கேள்விப்பட்டுக் கூட இருக்க மாட்டோம். இப்போது இந்த பேஜர்களும் வாக்கி டாக்கிகளையும தான் இஸ்ரேல் ஆயுதமாக மாற்றியுள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதை ஆயுதமாக மாற்ற முடியும் என ஹிஸ்புல்லா யோசித்து கூட இருக்க மாட்டார்கள். ஆனால், அதை கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளது இஸ்ரேல். இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் எப்படி நடத்தியது என்பது குறித்த தகவலை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த மூன்று உளவுத்துறை அதிகாரிகள் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது: அதாவது ஹிஸ்புல்லா அமைப்பினர் தைவான் நாட்டை சேர்ந்த கோல்ட் அப்பல்லோ என்ற நிறுவனத்திடம் பேஜர்களை ஆர்டர் செய்தனர். இந்த கோல்ட் அப்பல்லோ நிறுவனம் ஹங்கேரியைச் சேர்ந்த பிஏசி கன்சல்டிங் நிறுவனத்திடம் அவுட்சோர்ஸ் செய்திருந்தது.. இதில் விஷயம் என்னவென்றால் பிஏசி கன்சல்டிங் என்ற நிறுவனமே இஸ்ரேலின் மொசாட் அமைப்பு செட் அப் செய்த ஒரு ஷெல் நிறுவனமாகும்.
ஹிஸ்புல்லா தலைவர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை.. உடனே குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. பதறும் உலக நாடுகள்
மொசாட் நபர்களை வைத்தே இந்த ஷெல் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இது ஷெல் நிறுவனம் என்பதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அதே நபர்களின் அடையாளத்தை வைத்து வேறு சில ஷெல் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளனர். அந்தளவுக்கு மெசாட் பக்காவாக பிளான் செய்து இதில் இறங்கியுள்ளது.
வெடி மருந்து: மொசாட் உருவாக்கிய இந்த பிஏசி நிறுவனம் எல்லாரிடம் இருந்தும் ஆர்டர் எடுக்கவில்லை. பொறுமையாக இருந்து ஹிஸ்புல்லாவிடம் இருந்து மட்டும் ஆர்டர் எடுத்துள்ளனர். மேலும், அவர்கள் பேட்டரிக்குள் Pentaerythritol Tetranitrate (PETN) என்ற மிகவும் சக்திவாய்ந்த வெடிக்கும் பொருளையும் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு பேஜரிலும் சுமார் 3 கிராம் வெடி பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எல்லா பேஜர்களிலும் வெடிமருந்து இருந்துள்ளது. இருப்பினும், அதை ஹிஸ்புல்லா அமைப்பினரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு நுட்பமாக வெடிமருந்துகளை வைத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை எல்லா ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. இதை ஹிஸ்புல்லா கமெண்டர் அனுப்பிய மெசேச் என்றே நினைத்துள்ளனர். ஆனால், இந்த மெசேஜ் வந்த மறுநொடி அனைத்து பேஜர்களும் வெடித்துச் சிதறியுள்ளது.
யூனிட் 8200: மொசாட் அமைப்பின் யூனிட் 8200 என்ற பிரிவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தான் பேஜர்களில் யார் கண்ணிலும் படாமல் எப்படி வெடி மருந்துகளை வைக்கலாம் என்பது கண்டுபிடித்து வெற்றிகரமாகச் செய்துள்ளனர். மொசாட் அமைப்பின் இந்த யூனிட் 8200ஐ சைபர் ஸ்பை என்றும் அழைப்பார்களாம். இந்த யூனிட் கிட்டதட்ட அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு இணையான உளவு சேகரிக்கும் திறன்களைப் பெற்று இருக்கிறது.
இந்த யூனிட் 8200 அமைப்பு கடந்த காலங்களிலும் பல சிக்கலான ஆப்ரேஷன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. 2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஸ்டக்ஸ்நெட் வைரஸ் தாக்குதலில் ஈரான் அணுசக்தி மையத்தை முடக்கியது. மேலும், 2017இல் லெபனானின் தொலைத்தொடர்பைச் சேதப்படுத்தியது. குறிப்பாக 2018ல் ஐஎஸ்ஐஎஸ் போட்டிருந்த விமானத் தாக்குதல் திட்டத்தை முறியடித்தது.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications