பாகிஸ்தானில் 8 மாத கர்ப்பிணி மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தா(பே)ய்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து வாழ்ந்து வந்த 8 மாத கர்ப்பிணியை அவரது தாய் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள புத்ரன்வாலியை சேர்ந்தவர் முகாதஸ்(22). அவர் அதே பகுதியை சேர்ந்த தவ்பீக் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு வெளியேறி தவ்பீக்கை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் முகாதஸின் குடும்பத்தார் அவர் மீது கொலை வெறியில் இருந்தனர்.

மன்னிப்பு

மன்னிப்பு

முகாதஸின் தாய் ஆம்னா அவரை தொடர்பு கொண்டு அவரை மன்னித்துவிட்டதாகவும், வீட்டிற்கு வருமாறும் அழைத்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான முகாதஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு ஆம்னா வந்துள்ளார்.

வீடு

வீடு

ஆம்னா தனது மகளிடம் நைசாகப் பேசி அவரை வீ்ட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் ஆம்னா, அவரது கணவர் அர்ஷத், மகன் அலி ஆகியோர் இப்படி குடும்ப பெயரை கெடுத்துவிட்டாயே என்று கூறி அவரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

கர்ப்பிணி கொலை

கர்ப்பிணி கொலை

ஆம்னாவோ கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் முகாதஸை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து ஆம்னா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அர்ஷத்தை கைது செய்துள்ள போலீசார் மீதமுள்ள 5 குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

கவுரவக் கொலை

கவுரவக் கொலை

கடந்த வாரம் தான் லாகூரில் தனக்கு பிடித்த வாலிபரை திருமணம் செய்த ஜீனத் என்ற 17 வயது சிறுமி அவரது தாயால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் கவுரவக் கொலைகள் தொடர்கதையாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+