பெற்றோருக்காக சொந்த தம்பி, தங்கைக்கு தாயான பெண்...!
லண்டன்: லண்டனில் தன் சொந்தத் தாய்க்கே வாடகைத் தாயாக மாறி இரட்டையர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார் மகள் ஒருவர்.
லண்டனைச் சேர்ந்தவர் எல்லென். தாயார் பெயர் ஜென்னி. எல்லெனின் வளர்ப்புத் தந்தையும், ஜென்னியின் இரண்டாம் கணவருமான டோனி, ஒரு தொழிலதிபர்.
திருமணமான எல்லெனுக்கு மேடி என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்த நிலையி், மீண்டும் கர்ப்பம் தரித்த எல்லெனுக்கு அலெக்ஸ் மற்றும் ரூத் என இரட்டைக் குழந்தைகள். இதுவரை எல்லாமே தெளிவாகப் புரியும். இனிமேல் படிக்கும்போதுதான் மிகக் கவனமாக படிக்க வேண்டும். காரணம், இங்குதான் டிவிஸ்ட் வருகிறது கதையில்!
இந்த இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்து எல்லென் பெற்றெடுத்திருந்தாலும், அவை இரண்டும் உண்மையில், அவருக்கு தம்பி மற்றும் தங்கை உறவாகும். என்ன குழப்புகிறதா... இதோ மேற்கொண்டு படியுங்கள் புரியும்.
2வது திருமணம்...
கடந்த 1992ம் ஆண்டு 42 வயது டோனியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் 31 வயது ஜென்னி. ஆனால், அவருக்கு ஒரு வாரிசைப் பெற்றுக் கொடுக்க அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. காரணம் ஜென்னியை திருமணம் செய்து கொள்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கருத்தடை ஆபரேஷன் செய்திருந்தார்.
வாரிசு ஆசை...
எனவே, எல்லெனையே தனது மகளாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார் டோனி. இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஜென்னி - டோனி தம்பதிக்கு மீண்டும் வாரிசு ஆசை வந்தது. பெற்றோர் படும் வேதனையைக் கண்டு கலங்கிய எல்லென் தனது தாய்க்கு தானே வாடகைத் தாயாக மாறுவது என முடிவெடுத்தார்.
செயற்கைக் கருத்தரிப்பு...
அதன்படி, எல்லெனின் கருமுட்டையோடு, டோனியின் விந்தணுக்களைச் சேர்த்து சோதனைக் கூடத்தில் செயற்கை முறையில் கருவாக்கினார்கள். பின்னர் அதனை எல்லெனின் கருப்பையில் செலுத்தினார்கள்.
தத்து...
கரு நன்றாக வளர்ந்ததும், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார் எல்லென். இதனால் ஜென்னி குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியில் மூழ்கினர். குழந்தைகள் பிறந்த ஒருவாரத்தில் அவற்றை ஜென்னி, டோனி தம்பதி அதிகாரப்பூர்வமாக தத்தெடுத்துக் கொண்டனர். அக்குழந்தைகளுக்கு அலெக்ஸ் மற்றும் ரூத் எனப் பெயரிடப்பட்டது. தற்போது அக்குழந்தைகளுக்கு 12 வயதாகிறது.
தம்பி, தங்கை...
தான் கருவில் சுமந்து பெற்ற குழந்தைகளை தற்போது தங்கை, தம்பியாக பாவித்து வருகிறார் எல்லென். இதே போல், எல்லெனின் மூத்த மகளும் தனது தம்பி மற்றும் தங்கையை சித்தி மற்றும் மாமா என்றே அழைத்து வருகிறார்.
டம்மி மம்மி...
முறைப்படி எல்லெனின் குழந்தைகளுக்கு பாட்டி, தாத்தா முறையான ஜென்னியும், டோனியும், அலெக்ஸ் மற்றும் ரூத்தை தங்களது மகன் மற்றும் மகளாக வளர்த்து வருகின்றனர். ஜென்னியை மம்மி என அழைக்கும் அலெக்ஸ் மற்றும் ரூத், எல்லெனை டம்மி மம்மி (Tummy mummy ) என அழைக்கிறார்களாம்.
ஆனந்தம் விளையாடும் வீடு.. நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு.. இப்படித்தான் பாடத் தோன்றுகிறது இவர்களைப் பார்த்து!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications