பனிமலையில் தவறி விழுந்து ஜப்பான் மலையேற்ற வீராங்கனை பலி!
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ‘குரோடெக்' பனிமலையில் இருந்து இறங்கியபோது, எதிர்பாராத விதமாக மலையேற்ற வீராங்கனை கீ தனி குச்சி தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஜப்பானின் புகழ்பெற்ற மலையேற்ற வீராங்கனை கீ தனி குச்சி (43). உலகில் உள்ள உயரமான மலை சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.
கடந்த 2007-ம் ஆண்டு இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். சிறந்த மலையேற்ற வீரர்களுக்கு பிரான்ஸ் பத்திரிகை மோன்டக்னஸ் சார்பில் வழங்கப்படும் ‘பயோலெட் டி.ஓ.ஆர்.' விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் தனி குச்சிக்கு உண்டு.

இந்நிலையில், தனி குச்சி தன் சக மலையேற்ற வீரர்கள் 3 பேருடன், ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணம் டைசெட் சுஜனில் உள்ள குரோடெக் பனிமலையில் ஏறினார். இந்த மலையானது 6510 அடி (1924 மீட்டர்) உயரமுள்ளது.
மலையில் இருந்து தன் நண்பர்களுடன் இறங்கிய போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார் தனி குச்சி. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, கீ தனிக் குச்சியின் நண்பரும், மலையேறும் வீரருமான ஹிரோஷி ஹகிவாரா தெரிவித்துள்ளார்.
தனி குச்சியின் இந்த திடீர் மரணம் ஜப்பான் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications