Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உள்நாட்டு போர் வெடிக்கும்" ஹசீனாவுக்கு மரண தண்டனை வந்தவுடன் அவாமி லீக் பகீர்! வங்கதேசத்தில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று அவாமி லீக் முக்கிய தலைவர் ஹசன் சவுத்ரி விமர்சித்துள்ளார். மேலும், யூனுஸ் அரசு வங்கதேசத்தில் உள்நாட்டுப் போரை உருவாக்கப் பார்ப்பதாகவும் சாடியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு மிக மோசமான ஒரு வன்முறைச் சம்பவம் நடந்தது. அங்கு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் பலர் கொல்லப்பட்டனர். அங்குப் பிரதமராக இருந்த ஹசீனாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அவர் மீதான வழக்கை விசாரித்த வங்கதேச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

Sheikh Hasina Bangladesh

அவாமி லீக்

இதற்கிடையே இந்தத் தீர்ப்பை அவாமி லீக் மிக கடுமையாக விமர்சித்துள்ளது. கங்காரு நீதிமன்றம் பெயரளவில் விசாரணை நடத்திவிட்டு இதுபோன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளதாக ஹசீனாவின் அவாமி லீக் கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக அவாமி லீக் கட்சியின் முக்கிய தலைவரும், ஹசீனாவின் நெருங்கிய உதவியாளருமான மாஜி அமைச்சர் மொகிபுல் ஹசன் சவுத்ரி கூறுகையில், "இந்த வழக்கு விசாரணை கூட முறையாக நடக்கவில்லை.. ஹசீனாவுக்கும், அவாமி லீக் கட்சிக்கும் வங்கதேச மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதைக் காலி செய்யவே இப்படிச் செய்துள்ளனர்.

எல்லாம் டிராமா

இது ஒரு திட்டமிட்ட டிராமா.. இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் ஏதோ ஒரு தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்பதால் திட்டமிட்டு இதைச் செய்கிறார்கள். தீர்ப்பாயத்தின் தலைவர் கடந்த ஒரு மாதமாக நீதிமன்றத்திலேயே இல்லை. மேலும், தற்காலிக ஆட்சிக்குத் தீர்ப்பாயச் சட்டங்களைத் திருத்த சட்ட அதிகாரம் இல்லை. ஆனால், அதையும் அவர்கள் செய்துள்ளனர்.

ஹசீனாவின் வழக்கு விசாரணையின்போது யூனுஸ் ஆட்சி எந்தவொரு விதிகளையும் பின்பற்றவில்லை.. ஹசீனா சார்பில் வழக்கறிஞர் கூட ஆஜராக அனுமதிக்கவில்லை. எங்களைத் தப்பியோடியவர்கள் என்று சொன்னார்கள். டாக்காவில் உள்ள சில மூத்த வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்காக வாதாட விரும்பினர், ஆனால் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. எங்கள் சார்பாக யாரும் ஆஜராகாத நிலையில், விசாரணை நடைபெற்றது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் எழுவோம்

வங்கதேசத்தில் இப்போது அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவாமி லீக் கட்சியின் எதிர்காலம் குறித்துக் கேட்டபோது, "இன்னும் எங்கள் கட்சிக்குப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருக்கிறது. 1975 முதலே நாங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ளோம். கடந்த காலங்களிலும் நாங்கள் தடை செய்யப்பட்டோம்.. ஆனால் அதிலிருந்து மீண்டும் எழுந்தோம். இந்த முறையும் அதையே செய்வோம்

பிப்ரவரி மாதம் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். அந்தத் தேர்தலில் எங்களைப் போட்டியிட அனுமதிக்க வேண்டும். வங்கதேச மக்கள் தனக்கு ஆதரவு தருவதாக யூனுஸ் சொல்லி வருகிறார். அதில் நம்பிக்கை இருந்தால்.. தேர்தலில் போட்டியிட எங்களை ஏன் அனுமதிக்க மாட்டார்கள்? யார் வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும். அவாமி லீக்கை அனுமதிக்கவில்லை என்றால் அது பெயரளவில் நடக்கும் போலி தேர்தலாகவே இருக்கும். மக்கள் அதைப் புறக்கணிப்பார்கள்.

உள்நாட்டுப் போர்

மக்கள் அவர்களுடன் இல்லை. எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் பிரதமரின் மகன் சஜிப் வாஜித் ஏற்கனவே இதைச் சொல்லியிருக்கிறார். அதாவது, அவர்கள் (யூனுஸ் ஆட்சி) நாட்டை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ள விரும்புகிறார்கள். அப்படியானால், அதையும் எதிர்கொள்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர், "ஏன் பாகிஸ்தானுடன் இவ்வளவு நெருக்கம்? லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர்களை வங்கதேசத்திற்கு ஏன் அழைக்க வேண்டும்? பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அதிகாரிகளை ஏன் வங்கதேசத்திற்கு அழைத்து வர வேண்டும்? இவை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+