பெட்டில் உச்சா போனதற்கு தண்டனை... மகனுக்கு பெண் வேடமிட்டு பேஸ்புக்கில் படம் போட்ட தாய் கைது
புளோரிடா: அமெரிக்காவில் தினமும் இரவு படுக்கையை நனைக்கும் தனது 10 வயது மகனுக்கு தண்டனை தரும் விதமாக அவனுக்கு பெண் உடை உடுத்தி, அப்போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டில் ப்ராடோ. இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் 10 வயதாகும் அச்சிறுவனுக்கு தினமும் இரவு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இது தொடர்பாக கிறிஸ்டில் பலமுறை மகனைக் கண்டித்துள்ளார். ஆனால், அப்பழக்கத்தை அச்சிறுவனால் நிறுத்த முடியவில்லை. எனவே, மகனுக்கு தண்டனை தர தீர்மானித்தார் கிறிஸ்டில். அதன்படி, தனது நண்பர் கெய்த் டிரிஸ்கோல் என்பவரது ஐடியா படி தன் மகனுக்கு பெண் வேடமிட்டார். பின்னர் அதனை புகைப்படங்களாக எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டார்.
பெண் வேடத்தில் அழுதபடி, அவமானத்துடன் நின்றிருக்கும் சிறுவனின் புகைப்படத்தைக் கண்ட கிறிஸ்டிலின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் அளிக்கப் பட்டது.
அதன்படி, சிறுவனை மனரீதியாக துன்புறுத்தியதற்காக கிறிஸ்டி மற்றும் அவரது நண்பர் கெய்த் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அச்சிறுவனும், அவனது சகோதரிகளும் பாட்டின் பராமரிப்பில் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications