இந்தோனேசியாவின் அஃசே செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்.. புதிய சட்டம் அமல்
இந்தோனேசியாவின் அஃசே செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.
அஃசே: இந்தோனேசியாவில் உள்ள அஃசே என்ற பகுதி பாதி இந்தோனேசிய கட்டுப்பாட்டிலும், பாதி அந்நாட்டு அரசு கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. இங்கு இஸ்லாமிய ஆட்சி நடந்து வருகிறது.
உலகிலேயே இங்குதான் மிகவும் இறுக்கமாக இஸ்லாமிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த நாட்டிற்கு செல்லும் விமான பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அங்கு செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.

கட்டுப்பாடு
இந்த சட்டத்தின் படி விமானம் அந்த பகுதியின் எல்லைக்குள் நுழைந்தவுடன் முஸ்லீம் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும். முக்கியமாக விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக வந்த புகாரை அடுத்து இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தண்டனை தர வேண்டும்
இந்த விதியை பின்பற்றவில்லை என்றால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறையும் பின்பற்றவில்லை என்றால் இஸ்லாமிய சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இதற்காக போலீசை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

பேச்சுவார்த்தை
இதுகுறித்து அந்நாட்டு அரசு அனைத்து விமான நிறுவனங்களிடமும் பேசி இருக்கிறது,. இன்னும் ஏர் இந்தியாவிடம் பேசவில்லை. மற்ற நாட்டு விமான நிறுவனங்கள் அந்நாட்டின் கோரிக்கைக்கு தலையசைத்து இருக்கிறது.

மற்ற மதம்
அதுபோல் மற்ற மதத்தை சேர்ந்த விமான பணிப்பெண்கள் நல்ல உடை அணிய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அரைகுறை ஆடை அணிய கூடாது கண்ணியமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனங்களிடம் விவாதிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications