அமீரகத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இந்தியரை காப்பாற்றிய முஸ்லீம் பெண்

Subscribe to Oneindia Tamil

துபாய்: அமீரகத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய டிரைவரை முஸ்லீம் பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா நகரில் ஜவாஹிர் சைப் அல் குமைதி(22) என்ற இளம் பெண் மருத்துவமனையில் உள்ள தோழியை பார்த்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Muslim woman saves Indian driver's life in UAE

அப்போது வழியில் இரண்டு டிரக்குகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. என்னை காப்பாற்றுங்கள் என்று டிரக் டிரைவர் அலறும் சப்தம் கேட்டுள்ளது. உடனே குமைதி காரில் இருந்த தனது தோழியின் புர்காவை கழற்றி வாங்கிக் கொண்டு சென்று டிரைவரின் மீது போர்த்தி தீயை அணைத்தார்.

இதற்கிடையே போலீசார், ஆம்புலன்ஸ் வந்து இரண்டு டிரக் டிரைவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குமைதி காப்பாற்றிய டிரக் டிரைவர் இந்தியாவை சேர்ந்த ஹர்க்ரித் சிங் என்று தெரிய வந்துள்ளது.

ஹர்க்ரித் சிங் மற்றும் ஒரு டிரைவர் உயிருக்கு போராடியதை பார்த்து அந்த வழியாக தனக்கு முன்பு சென்றவர்கள் உதவி செய்யவில்லை என்றும், தனக்கு துணிச்சலை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வதாகவும் குமைதி தெரிவித்துள்ளார்.

குமைதி ஷார்ஜாவில் வேலை செய்கிறார். தக்க சமயத்தில் ஹர்க்ரித் சிங்கின் உயிரை காத்த குமைதியை கவுரவப்படுத்த அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+