இந்த வீடியோவை நீங்க பார்க்கும்போது நான் ஜெயிலில் இருப்பேன்.. கைதுக்கு முன்பாக இம்ரான் கான் பேச்சு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று 'தோஷகானா' வழக்கு தீர்ப்பால் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்பு இம்ரான் கான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
2018 முதல் 2022 வரையிலான பதவி காலத்தில் 140 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்புள்ள அரசு பரிசுகளை கருவூலத்தில் சேர்க்காமல் சட்டவிரோதமாக விற்றதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் லாகூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டில் இம்ரான் கான் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து, புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி.
பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து, இம்ரான் கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. ஏற்கனவே காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தையும், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் இல்லத்தையும் சூறையாடினர். இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் இம்ரான்கான் தனது எம்.பி. பதவியை இழக்கிறார். தீர்ப்பு வந்ததுமே உடனடியாக லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்து பஞ்சாப் காவல்துறையினர் இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்பு இம்ரான் கான் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், "எனது கைது எதிர்பார்க்கப்பட்டது தான். இந்த வீடியோ செய்தி உங்களை வந்தடையும் நேரத்தில், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த வீடியோயை நான் பதிவு செய்தேன்.
உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எனது கட்சியினர் அமைதியாகவும், உறுதியுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அமைதியாக வீட்டில் உட்கார வேண்டாம். என்னுடைய இந்த தீவிர முயற்சிகள் எனக்காக அல்ல, என் மக்களுக்காக, என் சமூகத்திற்காக" என்று இம்ரான் கான் அதில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications