தொழுகையின் போதே புதைந்த முஸ்லீம்கள்..பறிபோன 700 உயிர்கள்! மியான்மரை மிரள வைத்த நிலநடுக்கத்தின் கோரம்
நைபியிடவ்: இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சுமார் 700 இஸ்லாமியர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழையன்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மர் தலைநகர் நைபியிடவ்வை மையமாகக் கொண்டு காலை 11:50 மணி அளவில் முதலிலும் தொடர்ந்து சில நிமிட இடைவேளையில் இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் நில நடுக்கம் 7.7 என்ற ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் 6.4 என்று அளவிலும், 3வது நில நடுக்கம் 4 என்ற அளவிலும் பதிவாகி இருந்தது. மத்திய மியான்மரின் மான்வாவில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக வானுயர கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் நொடிப் பொழுதில் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்தன.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்திலும் பதிவாகியுள்ளது. அங்கும் ஏராளமான கட்டிடங்கள் சேதமாகி இருக்கிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காங், சட்டுச்சாக் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தில் காரணமாக வெடிப்புகள் சாலைகளில் ஏற்பட்டது. தாய்லாந்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பலி எண்ணிக்கை அச்சம் தரத்தக்க வகையில் உயர்ந்திருக்கிறது.
தொடர்ந்து மீட்பு பணியில் பல்வேறு உலக நாடுகள் கை கோர்த்திருக்கும் நிலையில் இந்தியா சீனா தாய்லாந்து ஆகிய நாடுகள் மீட்பு பணிகளை தொடங்க தங்கள் நாட்டின் வீரர்களையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக 1700 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் 3400 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் 300 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை 2000ஐ கடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 700 இஸ்லாமியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ரமலான் மாதத்தை விட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 700 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசி உள்ள மியான்மர் முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்த தூன் கி பேசுகையில்,"வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் சேதம் அடைந்த கட்டிடங்களில் சுமார் 60 மசூதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பல மசூதிகள் கடுமையாக சேதம் அடைந்ததோடு சில மசூதிகள் முற்றிலும் தரைமட்டமாயின. சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை பழமையான மசூதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 1700 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழுகையில் ஈடுபட்டு உயர்ந்த 700 இஸ்லாமியர்கள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தெரியவில்லை" எனக் கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications