Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மியான்மரை தாக்கிய இரு பயங்கர நிலநடுக்கங்கள்.. தாய்லாந்திலும் சரிந்த கட்டிடங்கள்! பல நூறு பேர் பலி?

Subscribe to Oneindia Tamil

மியான்மர்: மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மேலும், இதனால் பாங்காக்கில் எமர்ஜென்சி நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. இவை கடல் இருக்கும் பகுதியில் மோதும் போது சுனாமி ஏற்படும். பூமிக்கு அடியில் மோதும் போது பூகம்பம் ஏற்படும். அப்படியொரு மோசமான பூகம்பம் தான் இப்போது ஏற்பட்டுள்ளது.

Myanmar earthquake

அடுத்தடுத்து இரு பூகம்பங்கள்

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய நேரப்படி 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்துப் பதறிய மக்கள் வெளியே ஓடி வந்தனர். இருப்பினும், அடுத்த சில நொடிகளில் மற்றொரு நிலநடுக்கம் மியான்மாரைத் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவு தோளில் 7.7 & 6.4ஆக பதிவாகியுள்ளது.

எங்கே ஏற்பட்டது

இந்த நிலநடுக்கம் மியான்மரின் சாகிங் என்ற பகுதியில் மையம் கொண்டு இருந்தது. இதனால் அங்குப் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மியான்மர் முழுக்க இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாகத் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.. இது மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீனாவிலும் சில இடங்களில் வலிமையான பூகம்பம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது..

பல நூறு பேர் பலி?

மேலும், பல இடங்களில் உயரமான கட்டிடங்கள் அப்படியே சீட்டுக்கட்டு போலச் சரிந்துள்ளன. நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிப்பு மிக மோசமாக இருக்கும் நிலையில், பல நூறு பேர் இதில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் கட்டிட ஈடுபாடுகளிலும் மக்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டில் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மீட்புப் பணிகள் இப்போது தான் தொடங்கியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது. சீனாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் கூட அங்கு உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

மியான்மரில் தொடரும் நிலநடுக்கங்கள்

உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக மியான்மர். இருக்கிறது. அங்கு 1930 மற்றும் 1956க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கிலிருந்து தெற்காக ஓடும் சாகைங் ஃபால்ட் அருகே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த 26 ஆண்டுகளில் மட்டும் அங்கு ரிக்டரில் 7க்கு அதிகமான நிலநடுக்கம் குறைந்தது ஆறு முறை பதிவானதாகக் கூறப்படுகிறது.

அதேபோல கடந்த 2016ம் ஆண்டு மத்திய மியான்மரின் பண்டைய தலைநகராக அறியப்படும் பாகனில் 2016இல் 6.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் அங்குள்ள பிரபல சுற்றுலா தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாகக் கிராமப் புறங்களில் பாதிப்புகள் மோசமாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+