மியான்மர் நிலநடுக்கம்.. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களை விட மறுக்கும் ராணுவம்
நைப்பிதா: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்திருக்கிறது. நிலநடுக்க பாதிப்புகளை ஆய்வு செய்ய சர்வதேச பத்திரிகையாளர் குழு உள்ளே செல்ல முயன்ற நிலையில், அந்நாட்டு ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது.
ஏராளமான கட்டிடங்கள் உடைந்து விழுந்திருக்கின்றன. மீட்பு பணிகள் அதிகமாக உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது தொடர்பாக செய்திகளை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் மின் துன் கூறுகையில், "வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இங்கு வந்து தங்குவதற்கோ, ஆய்வு செய்வதற்கோ அனுமதி கிடையாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். உள்ளூர் ஊடகங்களுக்கும் மியான்மரில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வழக்கமாக சர்வதேச ஊடகங்களுக்கு உள்ளூரில் நிறைய மரியாதை இருக்கும். ஆனால், மியான்மரில் அப்படி இல்லை. வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 28ம் தேதி மியான்மரில் பலத்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவில் 7.7 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சீட்டுகட்டுகளை போல அப்படியே சரிந்தன. இது பற்றிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. ஏற்கெனவே அந்நாடு தற்போது உள்நாட்டு போரை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நிலநடுக்கம் பாதிப்பு மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
தொடக்கத்தில் நூறு பேர் மட்டும் உயிரிழந்ததாகவும், பலநூறு பேரை காணவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் தீவிரமடைய உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று மதியம் நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 2056ஆக இருப்பதாகவும், படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 3000க்கும் அதிகமாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தற்போது மியான்மரில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் சில நாட்கள் வரை மீட்பு பணிகள் நடைபெறும்.
நிலநடுக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக மண்டலே இருக்கிறது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான இங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சாகைங், மண்டலே, மக்வே, ஷான், நே பி தா, பகோ ஆகிய பகுதிகளிலும் அதிக பாதிப்பு பதிவாகியிருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்குப் எதிராக பல ஆயுதக்குழுக்கள் போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications