கோரச் சம்பவத்துக்கு நடுவிலும் கேட்ட குண்டு சத்தம்! ஐ.நா கண்டனத்தால் போர்நிறுத்தம் அறிவித்த மியான்மர்
நய்பிடாவ்: மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக, ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போர் நிறுத்த அறிவிப்பை மியான்மர் ராணுவ அரசு வெளியிட்டுள்ளது.
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து உடல்கள் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.

மியான்மரில் பல ஆண்டுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, மியான்மரில் ராணுவ அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்குழுவிற்கும், நாடு முழுவதும் உள்ள இனப் போராளிகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு, மியான்மர் இராணுவம் பூகம்ப நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சீன செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும் கிளர்ச்சியாளர்கள் மீது விமானத்தில் சென்று குண்டு வீசி தாக்குவதை மியான்மர் ராணுவம் நிறுத்தவில்லை.
இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவ அரசுக்கு ஐ.நா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மியான்மர் அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் வரை இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications