வங்கக்கடலில் விழுந்து நொறுங்கிய மியான்மர் விமானம்..116 பேரும் பலி
மாயமான மியான்மர் நாட்டு ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
நேப்யிடா: 116 பேருடன் சென்ற மியான்மர் நாட்டு ராணுவ விமானம் வங்கக்கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் இருந்து ராணுவ விமானம் ராடார் கருவியில் இருந்து காணாமல் போனது. 116 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், தவேய் நகரின் மேற்கே 20 மைல் தூரத்தில் விமானம் சென்ற போது காணாமல் போனது.

மயேக் மற்றும் யாங்கோன் அருகே விமானம் சென்று கொண்டிருந்த போது சரியாக பிற்பகல் 1.30 மணியளவில் விமானம் ராடார் கட்டுப்பாட்டை விட்டு நகர்ந்ததாக அந்த நாட்டு ராணுவ தளபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் வங்கக்கடலில் மியான்மர் ராணுவ விமானத்தின் பாகங்கள் கண்டறிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த 116 பேரும் உயிரிழந்திருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.
TeleTraderNews: #Myanmar military plane with 116 on-board goes missing https://t.co/m0bXFFy4Sh
— Value's Vector (@pulpmarkets) June 7, 2017


Click it and Unblock the Notifications
