அட பக்கி... காதலிக்கு சர்ப்ரைஸ் தர நிர்வாணமாக வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்து சிக்கித் தவித்த வாலிபர்

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், அவரது உடல் முழுவதும் ஆலிவ் எண்ணெயைத் தடவி, அந்த நபரை வெளியே கொண்டு வந்தனர்.
அந்த நபர் வடக்கு மெல்போர்ன் நகரின் மூரோப்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் சனிக்கிழமையன்று தனது வீட்டில் ஒரு சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதாவது தன்னைத் தேடி வரும் காதலிக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர் டிரஸ்ஸைக் கழற்றி விட்டு நிர்வாண கோலத்திற்கு மாறினார். பின்னர் வாஷிங் மெஷினுக்குள் போய் ஒளிந்து கொண்டார்.
ஆனால் உள்ளே போன சிறிது நேரத்திலேயே அதில் வசமாக சிக்கிக் கொண்டார். அவரால் வெளியேற முடியவில்லை.... மாட்டிக் கொண்டார்.
இதையடுத்து தீயணைப்புப் படையினர், போலீஸார், மருத்துவமனைக்குத் தகவல் பறந்தது. அத்தனை பேரும் ஓடி வந்தனர். உள்ளே சிக்கிய நபரை மீட்க முயற்சிகள் தொடங்கின. ஆனால் அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து அவர் உடலில் ஆலிவ் எண்ணையைப் பூசினர். அதன் பிறகு மெதுவாக அவரை வெளியே இழுத்து மீட்டனர். கிட்டத்தட்ட அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அந்தக் குறும்புக்காரர் மீட்கப்பட்டார்.
வெளியே வந்த அந்த நபருக்கு பெரும் தர்மசங்கடமாகி விட்டதாம். அவரது முகத்தில், அவமானம் தாண்டவமாடியது.
இப்படித்தான் சமீத்தில் அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில், ஒரு 11 வயது சிறுமி, வீட்டில் தனது சகோதரிகளுடன் கண்ணாமூச்சி ஆடியபோது வாஷிங் மெஷினுக்குள் போய் ஒளிந்து கொண்டபோது மாட்டிக் கொண்டார். அவரையும் போலீஸார் வந்து மீட்டனர். இதுதொடர்பான வீடியோவும் யூடியூபில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது இந்த வாலிபர்....
ஒளிய உனக்கு வேற எடமாப்பா கிடைக்கலா ராசா... ?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications